சனி, 8 பிப்ரவரி, 2014

ஆராய்ச்சித் துறையில் இந்தியா அமெரிக்கா, சீனாவை விட மிகவும் பின்தங்கி உள்ளது

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்கா, சீனாவை விட இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய அறிவியல் மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைக்கு உலக அளவில், 2011-ல், 14,350 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன.
இத்தொகையே தற்போது வரை நீடிக்கிறது.
2001-ஆம் ஆண்டுடன் (7530 கோடி டாலர்கள்) மொத்த முதலீட்டை ஒப்பிடும்போது சராசரியாக 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது.


அமெரிக்கா: 2010-ல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் அமெரிக்காவின் பங்கு 4070 கோடி டாலர்களாகவும், 2011-ல் 4240 கோடி டாலர்களாகவும் உயர்ந்தது. தற்போது வரை அந்நாடு முதலிடத்தையே வகித்து வருகிறது.
அதன் முதலீடு, 2011-ல் உலக அளவிலான முதலீட்டில் 30 சதவீதத்துக்கு குறைவாக இருந்தது.
2001-ல் உலக அளவிலான முதலீட்டில் 37 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு சதவீதம் படிப்படியாக குறைந்ததை அடுத்து மற்ற நாடுகளின் பங்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
சீனா: 2011-ல் சீனா 2080 கோடி டாலர்களை முதலீடு செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த முதலீடு அமெரிக்காவின் முதலீட்டில் பாதியாகும்.
ஜப்பான்: 1470 கோடி டாலர்களை முதலீடு செய்து ஜப்பான் மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்தியா: கடந்த 2007-ல் இந்தியா 240 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது.
இந்த விவரம், ஆராய்ச்சித் துறையில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதையே காட்டுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக