திங்கள், 3 பிப்ரவரி, 2014

திடீர் உடல்நலக்குறைவு: கனிமொழி எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளான கவிஞர் கனிமொழி, சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மேல்-சபை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் தாய் ராஜாத்தியம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், வரும் 5-ந்தேதி டெல்லியில் தொடங்க உள்ள மாநிலங்களவை கூட்டத்தில், இடஒதுக்கீடு குறித்து என்னென்ன விஷயங்கள் பேச வேண்டும் என்பது குறித்து, கடந்த 3 நாட்களாக இரவு கண் விழித்து கனிமொழி குறிப்பெடுத்து வந்தார்.
இதனால், அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார். இந்த நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. காலை 10.30 மணியளவில் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கனிமொழி  மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி திகாருக்கு அனுப்பிய சக்திகள் அவரோடு செல்போன் பேசிய நிரா ராடியாவை ஒன்றுமே குற்றம் சாட்டவில்லை ,இதில் பெரிய சதி மறைந்திருக்கிறது . கனிமொழியின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டி உள்ளது .


கனிமொழியை அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் அருகில் இருந்து கவனித்து வருகிறார். நேற்று அவரை, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தனர்.

நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு சென்று கனிமொழி எம்.பி.யிடம் உடல் நலம் விசாரித்தார்.

சிகிச்சை முடிந்து கனிமொழி எம்.பி. இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கனிமொழி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது, தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனிமொழிக்கு எம்.பி.க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

கனிமொழி எம்.பி. இன்று (நேற்று) காலை எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பு வலி கொண்ட சோர்வு மற்றும் உடற்சோர்வு நீங்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தொடர்ந்து ஓய்வு தேவைப்படுவதால், அடுத்த சில நாட்கள் இங்கு தங்கி இருந்து சிகிச்சை பெறுவார். உடல் நலம் பெற்றதும் வீடு திரும்புவார்.  மாலைமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக