வியாழன், 27 பிப்ரவரி, 2014

மோடி - வைகோ - விஜயகாந்த் - ராமதாஸ்! ஒரே மேடையில் !


 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக மும்முரமாக இறங்கியுள்ளது. மதிமுக, ஐஜேகே, பாமக கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இவற்றில் பாமக தவிர மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. தேமுதிகவை சேர்த்தால் கூட்டணி வலுவானதாக இருக்கும் என பாஜ கணக்கு போட்டுள்ளது.
 தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து கூட்டணியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவித்தாலும், எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையே பாமக வுக்கு 8 அல்லது 9 தொகுதிகளை ஒதுக்குவோம் என்று பாஜ கூறியுள்ளது. அதை பாமக ஏற்குமா என்ற தகவல் வெளியாகவில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கவும் பாஜ முடிவு எடுத்துள்ளது. பேச்சுவார்த்தைகளை முடித்து வரும் 1ம் தேதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட பாஜ மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் மார்ச் இறுதியில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றுவதற்கான ஏற்பாடு களையும் பாஜகவினர் செய்து வருகின்றனர்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக