புதன், 5 பிப்ரவரி, 2014

ரூபாவுக்கு சான்ஸ் பெற்றுத் தந்த சுருள்முடி

ரூபா மஞ்சரிக்கு சுருள் சுருளான அவரது தலைமுடி ஹீரோயின் சான்ஸ் பெற்றுத்தந்தது. அழகும், இளமையும் ஹீரோயின்களுக்கு சான்ஸ் பெற்றுத்தருகிறது. திரு திரு துரு துரு பட ஹீரோயின் ரூபா மஞ்சரி விஷயத்தில் அது வேறாக உள்ளது. தலையில் சுருள் சுருளாக இருக்கும் கூந்தல்தான் அவருக்கு சிவப்பு பட ஹீரோயின் சான்ஸ் பெற்று தந்தது. இப்படத்தின் ஆடியோ, டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டார். அவர் கூறியது:எனக்கு நகரத்து பெண் வேடம்தான் கிடைத்தது. கிராமத்து பெண்ணாக, குடிசைபகுதி பெண்ணாக நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கும் சிவப்பு படத்தில் ஆதரவற்ற இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பை தந்தார். ஷூட்டிங் சென்றதும், நீ நடிக்கக்கூடாது என்றார். ஷாக் ஆகிவிட்டேன். ஆமாம், காட்சிகளில் நீ நடிக்கவே கூடாது. நிஜவாழ்க்கையில் எப்படி யதார்த்தமாக இருப்பாயோ அப்படித்தான் காட்சிகளிலும் தோன்ற வேண்டும் என்றார். கட்டுமான தொழில் பின்னணியில் மிகவும் ஆழமான கருத்துக்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. டிரைலர், பாடலைபார்த்துவிட்டு புகழாதவர்களே இல்லை. எனது சுருள் தலைமுடிதான் சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக நிறைய பேர் சொல்கிறார்கள். அது உண்மைதான். கோணார் என்ற கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். நவீன் சந்திரா ஹீரோ. தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ம
- tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக