புதன், 12 பிப்ரவரி, 2014

தீக்குளிப்பேன்: தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. மிரட்டல்

தெலுங்கானா மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் மசோதா தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீமாந்திரா பகுதியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சப்பாம் ஹரி இன்று பத்திரிக்கை யாளர்களிடம் கூறுகையில், "தனித்தெலுங்கானா மசோதாவை அறிமுகம் செய்ய முயன்றால் மக்கள வையின் மையப்பகுதியில் தீக்குளிப்பேன். என்னுடன் மேலும் இரண்டு எம்.பி.க்களும் இணைந்து தீக்குளிப்பார்கள்." என்று தெரிவித்தார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக