புதன், 19 பிப்ரவரி, 2014

அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா ஐஸ்க்ரீம்ஸ்'' அம்மா சுண்டல் !

அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா கேபிள், அம்மா மெடிக்கல்ஸை தொடர்ந்து அம்மா தியேட்டர் கூட வரப்போவதாக கிசுகிசுக்கிறார்கள்.
மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியில் இதுபோல வேறு என்னென்ன கொண்டுவரலாம்.
*அழகு மங்கையர் வாழ்வில் அல்லல்கள் நீக்கும் ''அம்மா ப்யூட்டி பார்லர்''
*வறுமையோடு மல்லுக்கட்டும் ஏழை எழுத்தாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ''அம்மா பதிப்பகம்''
*சரக்குக்கு சைட் டிஷ் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைக்குடிமகன்கள் நலம் பெற ''அம்மா சுண்டல் மற்றும் மிச்சர் கடை'
*வெயில்காலமென்பதால் ஜில்லுனு குளிக்க ஆண்பெண் இருபாலருக்குமான ஜிலுஜிலு ''அம்மா நீச்சல் குளம்''
*நாளைய வாக்களர்களான இன்றைய குழந்தைகளை கவரும் வகையில் ''அம்மா ஐஸ்க்ரீம்ஸ்'
*அழகழகான கம்மல்கள், ஜோரான வளையல்கள் மினுமினுக்கும் மூக்குத்திகள் வாங்க ''அம்மா ஃபேன்ஸி ஸ்டோர்ஸ்'
வாலிப வயோதிப அன்பர்களின் ஏக்கம் போக்கும் அம்மா லேகியம் என்று   சொல்லாதவரைக்கும் சரிதான் 


*உடல் குண்டாகிவிட்டது தொப்பை பெரிதாகிவிட்டதென்கிற கவலை நீங்க உடல்மெலிது வனம்பெருக ''அம்மா உடற்பயிற்சி நிலையம்'
*முடி உதிர்கிறதென்கிற கவலை இன்றி வாழ இனி அமேசான் காடுகளின் அரியவகை மூலிகைகள் அடங்கிய ''அம்மா மேட்டின் மூலிகை தைலம் வழங்கும் நிலையம்''

*சமூகத்தின் குப்பைகளை அகற்றி குப்பைகளற்ற நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற ''அம்மா விளக்கமாறுகள் விற்பனையகம்'
*வாலிப வயோதிகர்களை கவரவும் கவ்வவும் விலையில்லா இன்கமிங் மலிவுவிலையில் அவுட்கோயிங் நாள் ஒன்றுக்கு 999 குறுஞ்செய்தி அன்லிமிடெட் ஃபேஸ்புக் ட்விட்டர் இணையசேவை இலவசமாக வழங்கும் ''அம்மா அலைபேசி சேவை '
*சென்னைக்கு மிக மிக அருகில் செங்கல்பட்டு தாண்டி இருந்நூற்றம்பதாவது கிலோமீட்டரில் அனைவரும் நிலம் வாங்கி வீடுகட்டி உடனே குடியேற அழகழகான ''அம்மா வீட்டுமனைகள்'' athishaonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக