வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

தர்மபுரி பஸ் எரிப்பு தூக்கு கைதிகளை (ADMK) விடுவிக்க ஜெயலலிதா இப்படி செய்கிறார்- விஜயதாரணி


சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினரை விடுவிப்பதற்காகவே இப்படி உள்நோக்கத்துடன் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா முயலுகிறார் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியுள்ளார். சென்னையில் நேற்று சட்டசபை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அரசாங்கம் உள்நோக்கத்தோடு எடுத்த முடிவுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிப்பது என்பது. தர்மபுரி தூக்குத் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்காக ஜெ. இப்படி செய்கிறார்- விஜயதாரணி தர்மபுரி தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது ஒரு முன் உதாரணமாக ஒரு டிரையல் கேஸ் நடத்த முயற்சி எடுத்தார்கள். இதுபோல பல்வேறு உள்நோக்கங்கள் இதில் மறைந்திருப்பதை பார்க்கிறோம். அந்த விதத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, வரவேற்கத்தக்கது. விரைவில் இது தவறான ஒரு செயல், தவறான முன் உதாரணம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நான் கருதுகிறேன் என்றார் இவர். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக