வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சிங்கப்பூரில் தமிழருக்கு 32 மாதம் சிறை; நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி


நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சித்த தமிழருக்கு சிங்கப்பூரில் 32 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழர்
சிங்கப்பூரில் வசித்து வருபவர் மணிவேல் முருகன் (வயது 28). திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இவர் அங்கு வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் அங்கு ‘பாது’ என்ற சமூக வலைத்தளத்தின் ஆர்வலர் ஆவார். இந்த வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, கவுகாசியாவை (கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையேயுள்ள பிரதேசம் இது.) சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தை தனது புகைப்படத்துக்கு பதிலாக பதிவேற்றம் செய்தார்.
பெண்களுடன் நட்பு
இந்த அறிமுகத்தினைக் கொண்டு 21 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களை தனக்கு தோழிகள் ஆக்கினார்.
அவர்கள் பல்வேறு வேலைகள் பார்ப்பவர்கள். அவர்களிடம் தான் இங்கிலாந்தை சேர்ந்தவன் என்றும், கனடாவை சேர்ந்தவன் என்றும் கூறி, அவர்களுக்கு தனது செல்போன் எண்ணை தெரிவிப்பார். அவர்களின் செல்போன் எண்களையும் பெறுவார்.
பின்னர் செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ வலைத்தளத்தின் மூலமாக உரையாடுவார். அந்தப் பெண்களிடம் இருந்து அவர்களது பாஸ்போர்ட், வேலை பார்ப்பதற்கான ‘ஒர்க் பெர்மிட்’ பற்றிய தகவல்களைக் கறப்பார். அந்தப் பெண்களுக்கு கவுகாசியாவை சேர்ந்த ஆண் ஒருவரின் படத்தை தனது படம் எனக்கூறி அனுப்புவார். அந்தப் பெண்களின் படத்தையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்வார். அவர்களும் அப்படியே அனுப்புவார்கள்.
நிர்வாணப் படமாக...
அந்தப் பெண்களின் புகைப்படங்களில் உள்ள தலையை, வேறு நிர்வாண உடல்களுடன் ஒட்டி, நிர்வாணப் படமாக மாற்றுவார். பின்னர் இந்தப் படங்களை அவர் அந்தப் பெண்களுக்கு அனுப்பி வைப்பார்.
அத்துடன், அந்தப் பெண்கள் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்படி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளாவிட்டால், அவர்களின் நிர்வாண படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பெண்கள், சிங்கப்பூர் போலீசில் புகார் செய்தனர்.
தண்டனை
இந்த வழக்கை மாவட்ட கோர்ட்டு நீதிபதி எத்தி தாம் விசாரித்தார். மணிவேல் முருகன் தரப்பில் வாதிடுகையில், தனது கட்சிக்காரர் மிரட்டல் விடுத்தாரே தவிர நிர்வாணப்படங்களை வெளியிடவில்லை என்று கூறப்பட்டது. மேலும், மணிவேல் முருகனுக்கு திருமணம் ஆகி, இந்தியாவில் மனைவியும் குழந்தைகளும் இருப்பதாகவும், பெருமளவு கடன்கள் இருப்பதாகவும், இரக்கம் காட்டுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற நபர்கள், இத்தகைய மிரட்டல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக கடும் தண்டனை விதிக்க வேண்டியது அவசியம் என நீதிபதி கூறி, 32 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மணிவேல் முருகன் செய்த குற்றத்துக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சிங்கப்பூர் சட்டத்தில் இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக