வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

சுமங்கலி திட்ட மோசடியால் கொத்தடிமைகளாக்க பட்ட சுமார் இரண்டு லட்சம் இளம்பெண்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ?


  • தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற பெண்கள் பெருமளவில் வேலைசெய்யும் துறையாக பஞ்சாலை இருக்கிறது.  இந்த தொழிற்சாலைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண் தொழிலாளர்கள்.  கேம்ப்கூலி திட்டம், மாங்கல்யத்திட்டம், திருமகள் திருமணத்திட்டம் என்று பல்வேறு பெயர்களில் சுமார் இரண்டு லட்சம் வளர் இளம் பருவப்பெண்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள்.இத்தகைய தொழிற்சாலைகளில் பனியாற்றும் பெண்கள் மிகக்குறைந்த ஊதியம், கட்டாய வேலை, கல்வி மறுப்பு, பணிப் பாதுகாப்பின்மை, கூடுதல் வேலைப்பளு, வாரவிடுப்பு வழங்கப்படாமை, பாலியல் தொல் லைகள், மனரீதியான பிரச்சனைகள், உடல்சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தப்பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.
இவர்களின் மறுவாழ்வு மற்றும் மேம்பாடு குறித்த விசயங்கள் பேசப்படவேண்டும் என்று  ’’முகாம் கூலி முறைக்கு எதிரான பிரச்சார இயக்கம்’’ 15 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ளன.   இந்த கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார அறிக்கையில் அரசியல் கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
இக்கோரிக்கைகளில் சில :
1. இளம் வயதில் பள்ளியில் இடைநின்று பஞ்சாலை மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளீல் சுமங்கலித்திட்டம் போன்ற கொத்தடிமை முறைகளில் வேலையில் அமர்த்தப்படுவதை அரசு தீவிர கண்காணிப்பு செய்து இது போன்ற முகாம் கூலி முறைகளை முற்றிலும் தடை செய்யவேண்டும்.
2. கிராமப்புற இளம்பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசும்,மத்திய அரசும் கொண்டுவந்துள்ள இளைஞர்களுக்கான ஆளுமைத்திறன் பயிற்சி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாகவும் முறையாகவும் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

 
3. பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில் நடைபெறும் உரிமை மீறல்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழு ஒன்றை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டும்.

படம் : அசோக்  nakkheeran.in  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக