வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ரூ.1,70,000 கோடி சொத்து படுத்தும்பாடு ! செத்துப்போன சாமியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு ! காரணம் சாமியார் சாக மாட்டாராம்!

Divya Jyoti Jagriti Sansthan (DJJS) founder Ahutosh Maharaj was declared clinically dead, his son Dalip Jha is coming to Punjab, from his native place Lakanur in Madhubani district in Bihar, to claim his body for cremation as per Hindu rites. Dalip said he would explore all legal options for the purpose.வாழும் கலை சாமியார் அசு தோஷ் மகராஜ் செத்துப் போன நிலையில் அவர் சாக மாட்டார் - என்று சீடர்கள் கூறினர் - அரசோ செத்துப் போனவருக்கு இசட் பிரிவு பாதுகாப்புக் கொடுக்கிறது - ஏராளமான சொத்துகள் இருப் பதால் பித்தலாட்டங்கள் அரங்கேறுகின்றன. ஜனவரி மாத இறுதியில் வாழும் கலை சாமி அசுதோஷ் மகராஜ் என்பவர் நுரையீரல் தொடர்பான நோயால் இறந்தார். இது குறித்து சனவரி 29-ஆம் தேதி சண்டிகர் மருத்துவ அதி காரிகள் அடங்கிய குழு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் நுரையீரல் தொடர்பான தொற்றுநோயால் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட் டதன் காரணமாக சாமியார் இறந்து விட்டார் இது குறித்து சாமியாரின் திவ்யஜோதி ஜகருதி சங்கத்திற்கு அறிக்கை அனுப்பினோம் என்றனர். சாமிகளின் மறைவை அறிந்து ஹரியானா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் டில்லியில் இருந்து அவரது பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டு இருந்தது, இந்த நிலையில், திவ்ய ஜோதி ஜகருதி சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அதில் குறிப்பிட்டுள்ளதாவது. சுவாமி அசுதோஷ் மகராஜ் நித்திய சமாதிக்கு செல்லும் முன்பு சீடர்களிடம், தான் நித்திய சமாதி அடையப் போவதாகவும் மீண்டும் பக் தர்களுக்கு அருள் பாலிக்க திரும்புவேன் என்று கூறினார்.
மருத்துவர்கள் அவர் களின் படிப்பின் படி மரணம் என்று கூறினாலும் நமது வேதங்களின் படி அது மரணமல்ல; நித்திய சமாதி தான் ஆகையால் பக்தர்கள் அனைவரும் அவரின் மர ணத்திற்காகத் துக்கம் கொண் டாடவேண்டாம். அவர் மீண் டும் வருவார். அதுவரை அவரது சமாதி முழுமை யான பாதுகாப்புடன் இருக் கும் என்று அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யுள்ளனர். இதனடிப்படையில் சுமார் ரூ 7 கோடி செலவில் இமயமலையின் பனிச்சிக ரத்திற்கு சமமான சூழ்நிலையை அவரது சமாதி வைக்கும் அறையில் உருவாக்கியுள்ள னர். இந்த அறையில் அவர் சமாதியுடன் இருப்பார் என் றும் சமாதி நிலை களைந்து மீண்டும் அவர் எழுந்து வரும் போது அதற்கு தேவை யான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் உடலை பரிசோ தனை செய்த மருத்துவர் ஹர்பால் சிங் கூறியதாவது அவர் உயிருடன் இருப்ப தற்கான எந்த ஒரு அடை யாளமும் அவருடைய உட லில் காணப்படவில்லை இயத்துடிப்பு, நாடித்துடிப்பு மற்றும் நரம்புகளின் மின் னோட்டம் போன்றவையும் காணப்படவில்லை. ஆகை யால் அவர் மருத்துவத்தின் படி இறந்த பிணம்தான் என்றார். 

இறப்பை மறுக்கும் பக்தர்கள் ஜெர்மனியைச்சேர்ந்த(டச்) அவரது பக்தர் சந்தோஷ் ஒஜ்வால் என்பவர் கூறியதா வது சுவாமி அசுதோஷ் மரண மடையவில்லை, எப்படி ராமகிருஷ்ணபரமஹம்சர் தன்னுடைய பூத உடலுடன் தேவிகாளியை அடைந் தாரோ அதே போல் சுவாமி அசுதோஷ் மகராசும் பூரண சமாதி அடைவார். இதற்கு நமது இதிகாசங்களில் பல உதாரணங்கள் உள்ளன. என்று கூறினார். திவ்ய கிராமம் பஞ்சாப் அரசு, சுவாமி அசுதோஷ் மகராஜ் இருக் கும் இடத்தை திவ்ய கிராம் (புனித கிராமம்) என்று அறிவித்துள்ளது. மேலும் சுவாமிகள் வாழும் போது அவருக்கு அரசே இசட் (Z) பிரிவு பாதுகாப்பு வழங் கியது. அது இப்போதும் விலக்கப்படவில்லை.

 பிணத்திற்கு இசட்(Z) பிரிவு பாதுகாப்பு. இதற்கு காரணமாக ஜலந்தர் காவல் துறை அதிகாரி ஜஸ்பிரீத் சிங்(புறநகர்) SSP Jalandhar (Rural) Jaspreet Singh  கூறியதாவது. இதுவரை சுவாமிகள் பற்றிய சரியான தகவல் எங்களுக்கு கிடைக்க வில்லை, ஆகையால் சுவாமி களுக்கு கொடுத்த பாது காப்பு தொடரும் என்றார்.  அவர் உயிருடன் உள் ளாரா அல்லது இறந்து போனாரா என்று ஏன் பரிசோதிக்கவில்லை? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த காவல்துறை அதிகாரி நாங்கள் மதம் தொடர்பான சர்ச்சையில் தலையிடுவதில்லை, அவர் களின் நம்பிக்கையில் அவர் உயிருடன் இருக்கிறார் என் றால் அது அப்படியே இருக் கட்டும் என்று பதில் கூறினார்.   மடத்திற்குள் குழப்பம்  சுவாமியின் மரணம் குறித்து மடத்திலிருந்து  மூன்று விதமான அறிக்கைகள் வந் துள்ளன. மடத்தின் செய்தித் தொடர்பாளர், சுவாமிகள் இறந்துவிட்டார் என்று கூறு கிறார். மதத்தின் தற்காலிக தலைவரோ சுவாமிகள் இன்றும் சமாதி நிலையில் தான் உள்ளார் என்று கூறு கிறார்.

ஆனால் தலைமைச் சீடர் சுவாமி விசாலந்து மற்றும் பெண் சாமியார் ஜெயபாரதி கூறியதாவது. சுவாமிகள் நித்திய சமாதி அடைந்தது உண்மையே அவர்களின் உயிர் உடலை விட்டுப்பிரிந்து விட்டது.
ஆனால் அது இந்த உடலுக் குள்தான் வரும் என்று சொல் வதற்கில்லை என்று புதுமை யான அறிக்கை விட்டுள்ளனர். ஓட்டுநர் தொடர்ந்த ஆட் கொணர்வு மனு வழக்கு இதனிடையே செத்துப் போன சாமியாரின் ஓட்டுநர் புரன் சிங் என்பவர் சண்டிகர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு (habeas corpus petition) ஒன்று தொடந்தார் அதில் சாமியாருக்கு உலகம் முழுவதும் 110 அமைப்பு களும், ஆயிரக்கணக்கான கிளை அமைப்புகளும் உள் ளன.

 இதன் மூலம்  சுமார் 1,70,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்களை அபகரிக்க சாமியாரின் சில சீடர்கள் முயற்சி செய்கின்றனர்.  அவர் மரணத்திலும் இந்த சீடர்களின் பங்கு உண்டு இது குறித்து நீதிமன்றம் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.எஸ் பேடி, சந்தேகப்படும் சீடர் கள் மீது அரசு என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள் ளார். மேலும் சீடர்களின் சொத்துக்கள் குறித்து அரசின் நிர்ணயத்தையும் கேட்டுள் ளார். மனுவில் முக்கியமாக அரவிந்தநாத், சோனி, நரேந் தர் சிங் மற்றும் விசாலாந்து ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இந் திய மற்றும் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்ற வர்கள் என்று கூறப்படு கிறது. இந்த நால்வரிடம் பல கோடி ரூபாய்கள் கருப்புப்பணமாக உள்ளன என மனுவில் கூறியுள்ளனர். viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக