ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

தேவர்சிலைக்கு 13 கிலோ தங்கக்கவசத்தை முதல்வர் ஜெயலலிதா அணிவித்தார்

 பசும்பொன்: பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை முதல்வர் ஜெயலலிதா அணிவித்தார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்த முதல்வர், தேவர் நினைவிடம் சென்று அங்கு தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்தார். அதிமுக சார்பில் இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பாதுகாப்புக்காக தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 சரக டிஐஜிக்கள், 7 எஸ்.பிக்கள் உள்பட 5000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்
புதிய தமிழகமும் விடுதலை சிறுத்தைகளும் இஸ்லாமிய அமைப்புக்களும் திமுக பக்கம் சென்றுவிட்டது தேவர் ஜாதியும் கோபத்தில் உள்ளது , அந்த கோபத்திற்கு லஞ்சமாக தங்கம் தாரை வார்ப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக