புதன், 5 பிப்ரவரி, 2014

இன்று பேஸ்புக்கிற்கு 10 வது பிறந்த நாள்

சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இது ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன.ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி உருவாக்கப்பட்டதே பேஸ்புக் ஆகும்.
அமெரிக்காவை தளமாககொண்டு இயங்க ஆரம்பித்த பேஸ்புக் உலகளவில் 2005 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகின்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக செயற்படும் பேஸ்புக் பல்வேறு தடைகளைத் தாண்டி உலக சனத்தொகையில் சுமார் 7 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவருவதுட்ன இந்த நிறுவனத்தில் தற்போது 5,800 பேர் வேலை செய்கின்றனர். ilankainet.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக