சனி, 25 ஜனவரி, 2014

இதோ Vladimir ஸ்டாலின் வடிவமைப்பில் இன்னொரு அதிமுக உருவாகி விட்டது ! சமாதான பேச்சுவார்த்தையை நிராகரித்த அழகிரி !

புரிந்து கொள்ளமுடியாத சில காரணங்கள் அழகிரி விவகாரத்தில் இருப்பது போல தெரிகிறது.
ஸ்டாலினை விட எப்படி பார்த்தாலும் அழகிரியின் வெயிட் அதிகம் என்பது திமுகவில் எல்லோரும் அறிந்த ஒன்றே ,

ஆனாலும் அழகிரி தலை தூக்க கூடாது என்று ஸ்டாலினும் இதர ஸ்டாலினிஸ்டுகளும் ஏன் இவ்வளவு காட்டமாக உள்ளார்கள் ?
அழகிரியின் மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவராக இருப்பதுவும் ஒரு வலுவான காரணமாகும் என்று நடுநிலையாளர்கள் கருதுவது இயல்புதான் .

ஜெயலலிதாவும் கூட ஸ்டாலினை ஒரு போதும் ஒரு எதிரியாக கருதியது கிடையாது , ஜெயா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அழகிரியைதான் எப்படியாவது வழக்குகளில் சிக்க வைத்து தொல்லை கொடுப்பார், அழகிரியின் பலம் ஜெயாவுக்கும் கலைஞருக்கும் நன்றாகவே தெரியும் . 

ஸ்டாலின் இதுவரையில் எந்த பிரச்சனையிலும் ஒரு கொள்கை ரீதியான நிலையை எடுத்தது கிடையாது, வாயை திறந்தா ஒரே வழ வழ கொழ கொழாதான் .
ஸ்டாலினின் சரியான சுயரூபம் அறியவேண்டுமாயின் ,
குஷ்பூ மீது செருப்பு எறிந்து கல்லுகளால் தாக்கிய சம்பவத்தில் ஸ்டாலின் பின்னணியில் இருந்து எப்படி செயல்பட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது,

கழகம் நூறுவீதம் தனது பஜனை கோஷ்டிகளால் நிறைந்து இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார், அவரது விருப்பமும் ஏறக்குறைய நிறை வேறிகொண்டு தான் இருக்கிறது .
தமிழ்நாட்டில் ஒரு அதிமுக மட்டும் போதுமா என்ன ? இதோ ஸ்டாலின் வடிவமைப்பில் இன்னொரு அதிமுக உருவாகி விட்டது ,

சென்னையில் கருணாநிதி ஏற்பாடு செய்த சமாதான பேச்சுவார்த்தையை மு.க. அழகிரி நிராகரித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைக்காக மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக அமரவைத்து பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதியை தி.மு.க. 2-ம் நிலைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மட்டும் சென்றனராம். ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தையை மு.க. அழகிரி ஏற்க மறுத்து கோபாலபுரத்துக்கு வரவில்லையாம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை முருகன், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திவிட்டு சென்றனராம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக