வெள்ளி, 24 ஜனவரி, 2014

தனுஷுடன் நடிக்க மறுத்த அலியா பட் தற்போது OK

சென்னை:தனுஷுடன்  நடிக்க மறுத்த அலியா பட், அவருடன் ஜோடி சேர திடீர் என ஒப்புக்கொண்டார்.இந்தியில் ‘ஸ்டுடண்ட் ஆப் த இயர் படத்தில் அறிமுகமானவர் அலியா பட். தற்போது ‘ஹைவே உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அநேகன்‘ படத்தில் ஹீரோயினாக நடிக்க அலியா பட்டிடம்தான் முதலில் பேசப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்தியில் ‘ராஞ்சனா‘ என்ற படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். இப்படம் ஹிட்டானது. இதையடுத்து இந்தி திரையுலகில் தனுஷ் கவனிக்கப்பட்டார். மீண்டும் புதிய இந்தி படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ‘ஆடுகளம்‘, ‘பொல்லாதவன்‘ ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தனுஷ் ஜோடியாக நடிக்க கேட்டு அலியா பட்டை அணுகினார் இயக்குனர். உடனடியாக அலியா பட் ஜோடி சேர ஒப்புக்கொண்டார். முதலில் அழைத்தபோது நடிக்க மறுத்த அலியா, பாலிவுட்டிலும் தனுஷுக்கு வாய்ப்பு வருவதாலேயே தற்போது அவருடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக