செவ்வாய், 7 ஜனவரி, 2014

சந்திரலேகா Ex IAS : கோவில்களின் நிர்வாகத்தை அந்தந்த குருக்களிடமே ஒப்படைக்க வேண்டும்!

மதுரை கலெக்டர் சுப்பிரமணியத்தை இன்று பகல் 11.45 மணி அளவில்,  முன்னாள் மதுரை கலெக்டரும், பாஜகவின் மாநில நிரவாகியுமான, சுப்பிரமணியசாமியின் ஆதரவாளருமான சந்திரலேகா சந்தித்தார். பின்னர் வெளியே வந்த செய்தியாளர்களிடம் பேசியபோது,  ’’முல்லைப்பெரியாறு அணையை திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தேன்’’ என்றார். அவர் மேலும்,  ‘’இந்து கடவுளை புண்படுத்தி பேசிய சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் கொடுக்கப்போகிறேன்’’என்றார். அரசும் அறநிலையத்துறையும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கோவில்களின் நிர்வாகத்தை அந்தந்த கோவில் குருக்களிடமே ஒப்படைக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தார்.nakkheeran.in இதுக்குதானே ஆசைப்பட்டாய் பார்பனகுமாரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக