செவ்வாய், 7 ஜனவரி, 2014

dinakaran.com: கட்சி கட்டுப்பாட்டை குலைத்தால் (அழகிரி ) தி.மு.க.விலிருந்து நீக்கம் !

சென்னை: தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில பத்திரிகைகள் விஷமத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இரு கட்சி முன்னோடிகள் பற்றி விஷமத்தனமான தகவல்களை சில பத்திரிகைகள் வெளியிடுவதாகவும் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.வுடன் தேர்தல் உறவு வேண்டாம் என்று அழகிரி கூறியிருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளதாகவும், அப்படி கூட்டணி பற்றி அழகிரி கூறியிருந்தால் அதற்கும் தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துக்கு மாறாக மு.க.அழகிரி கருத்து கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க.வின் கட்டுப்பாட்டை குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் செயல்பட்டால், கட்சியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் கருணாநிதி கண்டிப்புடன் கூறியுள்ளார். தினகரன் பத்திரிகை மாறன் பிறதேசுக்கு சொந்தமானது என்பதையும் முன்பு கருது கணிப்பு என்ற போர்வையில் அழகிரியின் செல்வாக்கை குலைக்கும் முயற்சியில் இதே பத்திரிகை ஈடுபட்டமையையும் தற்போது ஞாபகத்தில் கொள்ளவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக