திங்கள், 27 ஜனவரி, 2014

தொழிலாளர் கைகளை துண்டித்த ஒப்பந்ததாரர் !: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


 ஒடிசா தொழிலாளர்கள் கைகளை ஆந்திர மாநில ஒப்பந்ததாரர் துண்டித்த சம்பவம் தொடர்பாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடிந்த டிசம்பர் மாதம், ஒடிசாவில் தொழிலாளர்கள் கைகளை ஆந்திரப் பிரதேச்சத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் துண்டித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில் வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கல் சூளையில் வேலை பார்க்க தலா ரூ.14,000 கொடுத்து 12 பேரை வேலைக்கு அழைத்துச் சென்றார் ஒருவர். ஆனால், அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லாமல் சட்டீஸ்கருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சட்டீஸ்கரில் வேலை பார்க்க விரும்பாத அவர்கள் அங்கிருந்த தப்பித்தனர். 2 பேரை மட்டும் மீண்டும் பிடித்து வந்த ஒப்பந்தக்காரர் அவர்கள் வலது கைகளை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மாநில தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக