திங்கள், 6 ஜனவரி, 2014

அழகிரியின் கருத்து ஸ்டாலினுக்கு தேவையில்லையாமே ! தேவையற்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் ?


கேள்வி: தேமுதிக கூட்டணி தேவையில்லை என்று தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே?
பதில்: நான் படிக்கவில்லை. தேவையற்ற செய்திகளை நான் பார்ப்பதுமில்லை. அவசியமில்லாத செய்திகளை நான் படிப்பதுமில்லை.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக மாநாடு நடைபெறவுள்ள திருச்சியில் தீரன் நகரில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
திருச்சியில் திமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற இருக்கிறது. கழிப்பிட வசதிகளும், குளியல் அறைகளும் போதுமான அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 15ஆம் தேதி மாநாடு தொடங்கி 16ஆம் தேதி மாலைக்கு மேல் திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கக் கூடிய தலைவர்கள் எல்லாம் அதில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். மாநாட்டு பந்தல் 1200 நீளமும், 600 அடி அகலமும் மாநாட்டு பந்தல் அமைய உள்ளது. மொத்தம் 250 ஏக்கர். அதில் 100 ஏக்கர் தொண்டர்களின் கார் பார்க்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி: மாநாட்டில் கூட்டணி பற்றிய முழு அறிவிப்பு வெளியிடப்படுமா?
பதில்: கூட்டணி பற்றி தலைவர் கலைஞர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கக் கூடிய கட்சிகளோடு இணைந்து, போட்டியிட இருக்கிறோம் என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். வேறு ஏதேனும் கட்சிகள் சேர்ந்தால் கலைஞர் உரிய முறையில், உரிய நேரத்தில் அறிவிப்பார்.
கேள்வி: திமுக கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால் இதுவும் ஊழல் கட்சிதான் என்று பாஜக சொல்கிறதே?
பதில்: அதை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
கேள்வி: தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததா?
பதில்: தேமுதிகவை பொறுத்தவரை ஏற்கனவே கலைஞர் அவர்கள், வந்தால் மகிழ்ச்சி என்று அறிவித்திருக்கிறார். அதையொட்டி நேற்றையதினம் நானும் அதைத்தான் வழிமொழிந்து குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் வழிமொழிகிறேன்.
கேள்வி: வேட்பாளர் பட்டிய-ல் திமுக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
பதில்: அணிகளுக்கென்று எந்த வாய்ப்பும் கிடையாது. வெற்றிபெறக் கூடிய வகையில், புதியவர்களுக்கு இளைஞர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். எங்களுடைய கருத்து.
கேள்வி: மாநாட்டில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அதுபற்றி தலைவர் கலைஞர் முடிவு எடுத்து அறிவிப்பார்கள்.
கேள்வி: அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணம் நாங்கள்தான் என்று தேமுதிக தலைவர் கூறுகிறாரே? அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்: அது மக்களுக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும்.
கேள்வி: திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்
பதில்: திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதோ, போட்டியிடவில்லையோ நிச்சயமாக திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும்.
கேள்வி: குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும்
பதில்: நீங்கள் மகிச்சி அடையக் கூடிய வகையில் போட்டியிடும்.
கேள்வி: எதை மையமாக வைத்து திமுக பிரச்சாரம் அமையும்.
பதில்: மத்தியில் மதசார்ப்பற்ற, நிலையான, மக்களுக்கு பயன்பெறக் கூடிய இந்திய நாட்டில் இருக்கக் கூடிய பிற மாநிலங்களுக்கு பயனடையும் வகையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் தலைவர் கலைஞர் அவர்களுடைய உணர்வு. அவருடைய எண்ணம்.
கேள்வி: தேமுதிக கூட்டணி தேவையில்லை என்று தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே?
பதில்: நான் படிக்கவில்லை. தேவையற்ற செய்திகளை நான் பார்ப்பதுமில்லை. அவசியமில்லாத செய்திகளை நான் படிப்பதுமில்லை.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் மதுரை மாநகர மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதே?
பதில்: ஏற்கனவே தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் கலந்துபேசி அறிவித்திருக்கக்கூடியது பத்திரிகையில் வந்திருக்கிறது. அதுதான் என்னுடைய பதில். இவ்வாறு கூறினார்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக