வெள்ளி, 24 ஜனவரி, 2014

தாலி கட்டி திருமணம் செய்த பின் விஷம் குடித்து காதல் ஜோடி சாவு ! பெற்றோர் எதிர்ப்பால் பரிதாபம்

பெற்றோர் எதிர்ப்பால் பரிதாபம் தாலி கட்டி திருமணம் செய்த பின் விஷம் குடித்து காதல் ஜோடி சாவு நீடாமங்கலம்:நீடாமங்கலம் அருகே பொட்டு, பூ வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட பின்னர், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த வையகளத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(25). பட்டதாரி. அதே ஊரை சேர்ந்தவர் ஜெயப்பிரியா(21). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.


இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று ரஞ்சித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயப்பிரியாவை வரவழைத்தார்.
அவருக்கு குங்குமப் பொட்டு, பூ வைத்து, தாலி கட்டி பின்னர் இருவரும் சேர்ந்து விஷம் குடித்தனர். மயங்கிக்கிடந்த இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்றி நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஜெயப்பிரியாவும் பரிதாபமாக இறந்தார். நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக