ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கர்நாடகத்தில் டப்பிங் பட மாபியா கும்பல் கன்னட படங்களை அழிக்கும் பேய் ! பிரகாஷ்ராஜ் ,

பெங்களூர்:கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில்
டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். >
அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது. டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன். 
இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன். கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக