செவ்வாய், 7 ஜனவரி, 2014

மாஜி காதலர்கள் சிம்பு-நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிக்கும் காட்சி படமாகிறது

சென்னை:மாஜி காதலர்கள் சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது.சிம்பு, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்த படம் ‘வல்லவன். நெருங்கி பழகிவந்த சிம்பு, நயன்தாரா காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதில் மனம் உடைந்த நயன்தாரா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகே நடிக்க வந்தார். இதற்கிடையில் பிரபு தேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பிறகு அவரிடமிருந்தும் பிரிந்தார். காதல் வாழ்க்கையை மறந்து மீண்டும் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரையும் தட்டிச்சென்றிருக்கிறார்.மீண்டும்
இதற்கிடையில் ‘பசங்க‘ பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க தேவதை போன்ற ஹீரோயினை தேடிவருவதாக இயக்குனர் கூறி இருந்தார். தேவதை என்றால் அது நயன்தாராதான் என சிம்பு கூறினாராம். இதையடுத்து நயன்தாராவை அணுகி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார் பாண்டிராஜ். அவரும் பழைய சம்பவங்களை மறந்து நடிக்க சம்மதித்தார். இதற்காக பெரிய தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. சிம்பு, நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. நேற்று நயன்தாரா நடித்த காட்சி மட்டும் படமானது. சிம்பு அமெரிக்காவில் இருந்து நாளை திரும்புகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
-tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக