திங்கள், 27 ஜனவரி, 2014

மதுரையில் அழகிரிக்கு அட்டகாசமான வரவேற்பு !அமைதி காக்க அழகிரி வேண்டுகோ



தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி எம்.பி. தி.மு.க. வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி நேற்று மாலை விமானம் மூலம் 
கப்பட்ட மு.க.அழகிரி நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஆதரவாளர்கள் 100–க்கும் மேற்பட்ட கார்களில் தயாராக நின்றனர். விமான நிலையத்தை விட்டு மு.க.அழகிரி வெளியே வந்தபோது, ‘‘அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க.... கலைஞர் வாழ்க...’’ என்று கோஷமிட்டனர். தாரை தப்பட்டை முழங்க மு.க.அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்களிடம் மாலை, சால்வைகளை பெற்றுக் கொண்ட மு.க.அழகிரி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
அவருக்கு முன்னதாக 200–க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஊர்வலமாக வந்தது. வழிநெடுக ஆதரவாளர்கள் மு.க.அழகிரிக்கு சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தவிர 2–ம் கட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் உதயகுமார், விருதுநகர் போஸ், ஜலால்லுதீன், மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் எம்.எல்ராஜ், குடைவீடு அருண்குமார், முபாரக்மந்திரி, கண்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மு.க.அழகிரி வீடு முன்பும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரை வரவேற்று கோஷங்கள் எழுப்பினர். அங்கு

வர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது ஆதரவாளர்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனது பிறந்தநாள் வருகிற 30–ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஏழை–எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இந்த விழா நடைபெறும். ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனாலும் வருகிற 30–ந்தேதி சிறப்பான முறையில் கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
எனது பிறந்தநாள் விழா முடிந்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பார்க்கலாம். இப்போது எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அங்கு திரண்டு இருந்த ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி பேசியபோது, இன்று வந்ததைவிட வருகிற 30–ந்தேதி இன்னும் சிறப்பாக நீங்கள் வரவேண்டும். அதுவரையில் அமைதியாக இருப்போம். வெற்றி பெறுவோம் என்றார். இதையடுத்து மு.க.அழகிரி வீட்டில் இருந்து அவரது ஆதரவாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
வருகிற 30–ந்தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மு.க.அழகிரி பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட ஏற்பாடு செய்யபபட்டு வருகிறது. இதற்காக மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் உள்ள பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஏராளமான வாகனங்களில் 30–ந்தேதி மதுரை வந்து மு.க.அழகிரியை சந்திக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மு.க.அழகிரியை வரவேற்று நடைபெற்ற வாகன அணி வகுப்பை போலீசார் வீடியோவில் பதிவு செய்த மதுரையில் அழகிரிக்கு அட்டகாசமான வரவேற்பு !அமைதி காக்க அழகிரி வேண்டுகோள் malaimurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக