திங்கள், 20 ஜனவரி, 2014

நஸ்ரியா திருமணம்! ஆண்ட்ரியாவை காதலித்த பாசில் மகன் பஹத்தை மணக்கிறார்


முன்னதாக நடிகை ஆன்ட்ரியாவை தான் தீவிரமாக காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பஹத். ஆனால் ஆன்ட்ரியாவோ தான் யாரையும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மலையாள முன்னணி நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா திருமணம் 2014ல் நடைபெற இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.
2013ல் மலையாளத்தில் தனது வித்தியாசமான படங்கள் மூலம் மனம் கவர்ந்தவர் நடிகர் பஹத் பாசில். இவர் முன்னணி இயக்குநரான பாசிலின் மகன் ஆவார். தற்போது அஞ்சலி மேனன் இயக்கி வரும் (L For Love) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டிவி தொகுப்பாளராக அறிமுகமாகி, Mad Dad என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. தமிழில் 'நேரம்' வெளியான பிறகு முன்னணி நடிகையாக வலம்வர ஆரம்பித்தார். தனுஷுடன் 'நய்யாண்டி', ஆர்யாவுடன் 'ராஜா ராணி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் தமிழில் 'திருமணம் என்கிற நிக்கா', மலையாளத்தில் 'சலலா மொபைல்ஸ்' ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றன.
பஹத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று இயக்குநர் பாசில் தெரிவித்திருக்கிறார். திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பஹத் பாசிலுக்கான சிறந்த நடிகர் விருதை நஸ்ரியா பெற்றுக் கொண்டபோது தான் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி உறுதியானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக