வெள்ளி, 24 ஜனவரி, 2014

போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி

மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 24.01.2014 வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் அதுபற்றி ஒண்ணும் சொல்லவில்லை. போகப்போக தெரியும்.
கேள்வி: எதிர்காலத் திட்டம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: நாடாளுமன்றத் தேர்தலின்போது தெரியும்,
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: போட்டியிட மாட்டேன்.
கேள்வி: உங்கள் ஆதரவாளர்கள் நீக்கம் குறித்து தற்போது உங்களின் மனநிலை என்ன?
பதில்: என்னுடைய ஆதரவாளர்களை நீக்கியதற்காக கட்சியில் முறையிட்டேன். அதற்காக கிடைத்த பரிசு இது. (கட்சியில் இருந்து நீக்கப்பட்டது)
கேள்வி: உங்களுடைய நீக்கம் திமுகவுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: அதைப் பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு பதில் அளித்தார்.

நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின்னர், என் தொண்டர்கள் இன்னும் அதிக பலத்துடன் உள்ளார்கள். என் நிலைப்பாடு குறித்து, ஜனவரி 30 மதுரையில் நடக்கும் பிறந்த நாள் விழாவில் தெரிவிப்பேன். மதுரைக்கு ஜனவரி 26 வருகிறேன். என் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அது வரை அமைதியாக இருக்க வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக