செவ்வாய், 7 ஜனவரி, 2014

பிஜேபி கடும் அப்செட்! மோடியை பற்றி பேசுபவர்கள் தற்போது ஆம் ஆத்மியை பற்றியே பேசுகிறார்கள்


தில்லியில் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்களை விமர்சித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் குமார் பிஸ்வாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க செய்திதொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது. குமார் பிஸ்வாசின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்காக, ஆம் ஆத்மி கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். விளையாட்டுத் தனமான கருத்துகளை கூறக் கூடாது. ஆம் ஆத்மி புதிய கட்சியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதன் தலைவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.
ஆம் ஆத்மி கட்சியை பார்த்து நிச்சயமாக பாஜக பயப்படுவது தெரிகிறது. டெல்லி சட்ட சபையில் வரவேண்டிய பெரிய வெற்றியை ஆம் ஆத்மி சுலபமாக பறித்து கொண்டதை பாஜக எப்படி மறக்க முடியும்? நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் இனி ஆம் ஆத்மிக்கும் கூட விழக்கூடிய சாத்தியம் இருக்கிறதே ? குறிப்பாக மோடி ஒரு நட்சத்திரம் என்று நம்பி கொண்டிருக்கும் பலதரப்பட்ட மக்களும் தற்போது ஆம் ஆத்மியை பற்றியே பேசிகொண்டிருப்பது எரிச்சல் வருமா வராதா ?
விரைவில் ஆம் ஆத்மியையும் அரவிந்த் கேஜ்ரிவாளையும் காங்கிரசின் கை கூலி அல்லது வெளிநாட்டு ஏஜென்ட் போன்று ஏதாவது கூறி சேறு வாரி இறைக்க போகிறார்கள். காத்திருந்தவன் பெண்ட்டாட்டியை நேற்று வந்தவன் கதையாகியதை எப்படித்தான் தாங்குவதோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக