புதன், 22 ஜனவரி, 2014

திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தை தகர்த்த பெரியார்






நிழல் திருநாவுக்கரசு, டிரம்ஸ் சிவமணி, பிரியா பாபு ஆகியோருக்கு  பெரியார் விருது  திராவிடர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாச கர் வட்டம், பகுத்தறி வாளர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தி வரும் தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திரா விடர் திருநாளை பண் பாட்டுத் திருவிழாவாக வும், தமிழ்ப்புத் தாண்டு - பொங்கல் விழாவாகவும் மிகுந்த சிறப்புடன் நடத்தி வருகின்றன.
இவ்விழாவின் இரண் டாம் நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை விருந்து என பெரியார் திடலே களை கட்டியது. இவ்விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலை மற்றும் இசைக் கலைஞர்களை பாராட்டியும், பெரியார் விருது வழங்கி சிறப் பித்து பேசுகையில்:- திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதா யத்தை தகர்த்த இயக்கம் தான் திராவிடர் இயக் கம் என பெருமிதம் கொண்டார்.
நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள்
திராவிடர் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு -பொங்கல் விழா பண் பாட்டுத் திருவிழாவாக சென்னை பெரியார் திடலில் நேற்று (18.1.2014) இரண்டாம் நாள் நிகழ் வாக மாலை 4 மணியள வில் பெரும் திரளாக கூடியிருந்த மக்களி டையே, து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கும் பெரியமேளம் கலைக் குழுவின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத் திக் காட்டப்பட்டன.
பெரியார் திடலில் செயற்கைக் கடல் - மீனவர் குடில்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறு வர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள், பொது மக்கள் கழகத் தோழர் கள் தோழியர்கள் இக் கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பார்த்து ரசித்து பாராட்டினர்.
மூன்று நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா விற்காக பெரியார் திடல் முழுவதும் திராவிடர் திருநாளையொட்டி, 5 வகை நிலங்களில் ஒன் றான நெய்தல் நிலத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வளாகத்தின் நுழை வாயில் முதல் பகுதியில், கடல் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் செயற்கை கடல் ஒன்றும்,  அதன் அருகில் மீனவர் குடில் ஒன்றும் கட்டப் பட்டிருந்தது.
மீனவர் குடில் அருகே, கடல் சார் உணவுகளான பல்வேறு வகை மீன்கள் பொறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் பொங்கல் விழாவை காண வந்த மக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலைக் குறிக்கும் தமிழ் பெயர்களான, அரவல், அரி, உவர், உவரி, கயம், சுழி, தாழி, திரை உள்பட 65 பெயர்கள் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தமிழர்களின் சிறப்புகள்
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களின் பண்டைய துறை முகங்கள், தமிழர்கள் கப்பல் கட்டப் பயன்படுத்திய அளவைகள் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருந் தன.

கடலில் பயணம் செய்யும் மரக்கலம் செய்வதில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதற்கு ஆதாரமாக இன்னும் தமிழிலே வழங்கப்படும் கப்பல் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் மற்றும் தமோய் இன மக்கள் பயன்படுத்தும் கட்டு மரங்களின் அடித்தளங்களில் இன்றும் அம்மா, அக்கா வக்கா என்று தமிழ் சொற்கள் உள்ளதுடன், நியூசிலாந்தில் அவர்கள் வசிக்கும் பகுதியின் பெயரும், வான்கரை என தமிழில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், லெப்டினன்ட் வாக்கர் என்னும் ஆங்கிலேய மாலுமி ஒருவர், கி.பி.1811இல் நமது கப்பல்களைக் கண்டு, ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும். ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அரிய தகவலும் வைக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழா
தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாவை திரா விடர் பெருங்குடி மக்கள் கொண்டாடும் வகையில் இம்மூன்று நாள் விழாவையொட்டி, பெரியார் திடலில் உணவுத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
இதில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, சிறீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, கீழக்கரை கலகலா, விருதுநகர் வீச்சு புரோட்டா போன்ற உணவுப் பொருள்களும், மதுரை, நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தேவசகாயம் அவர்களை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வரும் வணிக நிறுவனமான தமிழக எண்ணெய் பலகாரங்களான  மிக்சர், ஓமப்பொடி, சீவல், முறுக்கு வகைகள், அதிரசம் போன்ற பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிச் சாப்பிட்டனர்.
ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சி
பெரியார் திடலில் மாலை து.பாப்பம்பாடி எம்.முனுசாமி வழங்கிய பெரிய மேளம் கலைக்குழு வின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் ட்ரம்ஸ் மைக்கேல் வழங்கிய எதிலும் இசை பிறக்கும் நிகழ்ச்சியும், பிளாக்பேர்ல் குழுவினரின் இசை விருந்தும் காண்போர் மெய் சிலிர்க்கும் வகையில் நடைபெற்றது.
பெரியார் விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்
இதைத் தொடர்ந்து பெரியார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி அறிமுக உரையாற்றினார்.
வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றினார். வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பெ.செல்வராசு, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், சென்னை கழக மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி, ப.உதயகுமார், புழல் ஆனந்தன், செ.ர.பார்த்த சாரதி, செ.கனகா, க.வனிதா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து பெரியார் விருது பெறும் பெருமக்களான தோழர் மாற்றுப் பாலினத்தை சேர்ந்த பிரியா பாபு அவர்களின் தன்விவரக் குறிப்பை தோழியர் மரகதமணி வாசித்தார். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்களின் தன் விவரக்குறிப்பை தோழர் இசையின்பன் வாசித் தார். இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்களின், தன் விவரக்குறிப்பை மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வாசித்தார். பெரியார் விருது பெறும் இம்மூவரின் சாதனை களைப் பாராட்டி அரங்கில் கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.
இதையடுத்து இம்மூன்று சாதனையாளர் களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, பெரியார் விருது (சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகில் வைக்கப்படும் பெரியார் சிலையின் மாதிரி) வழங்கி அவர்களின் சாதனையை பட்டியலிட்டு எடுத்துக் கூறி வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக பெரியார் விருது பெற்ற பெருமக்க ளான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இத ழாளர் நிழல் திருநாவுக்கரசு ஆகியோர் ஏற்புரை யாற்றினர்.
குறிப்பாக பிரியாபாபு பேசுகையில்: - தந்தை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திரு நாளில், பெரியார் விருது பெறும் முதல் திருநங்கை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். திருநங்கைகளை மாற்றுப் பாலின இனத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட வேண்டும் என்று பிரியா பாபு கூறினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
இவ்விழாவில் பெரியார் விருது வழங்கி சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுகையில்:- பெரியார் விருது பெற்ற இம்மூவரும் அற்புதமான புதையலாக நம்மினம் பெருமிதம் பெறக்கூடிய ஆற்றலாளர்களாக இருக்கிறார்கள். திருநங்கை பிரியாபாபு அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கலாம், ஆனால் பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணாக பிரியாபாபுவை நாங்கள் பார்க்கிறோம். திருநங் கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த இந்த சமுதாயத்தை மாற்றி தகர்த்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.
அதே போன்று நாம் எல்லாம் நாவால் பேசு கிறோம். இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி அவர்கள் விரல்களால் பேசுகிறார். அவரின் சாதனைகளை நாமும், அவரின் தாயாரும் பார்த்து மகிழ்கிறோம். புதை பொருள்களை வெளியே கொண்டு வரும் பணியை மிகவும் போற்றத்தக்க வகையில் செய்து வருபவர் இதழாளர் நிழல் திருநாவுக்கரசு அவர்கள். எனவே அவரைப் பாராட்டி சிறப்பிப்பது மிகவும் மகிழ்ச்சியானது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும் தொண்டுமாகும்.
அந்த வகையில் சாதனையாளர்களான தோழர் பிரியாபாபு, டிரம்ஸ் சிவமணி, இதழாளர் நிழல் திருநாவுக்கரசு  ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் அளித்தால் உலக அளவில் புகழ் பெறுவார்கள். எனவே இந்த விருது அவர்கள் கையில் வழங்கப் பட்ட வாளாக இருக்கும் என தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய து.பாப்பம்பாடி எம்.முனுசாமி அவர்களின் பெரிய மேளம் கலைக்குழுவினருக்கும், ட்ரம்ஸ் மைக்கேல் குழுவினருக்கும், பிளாக் பேர்ல் குழுவி னருக்கும் தமிழர் தலைவர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசுப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மற்றும் கழகத் தோழர்கள் - தோழியர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக