சனி, 4 ஜனவரி, 2014

ஓரின சேர்க்கை உத்தரவை விமர்சித்ததற்கு தலைமை நீதிபதி வருத்தம் !

புதுடில்லி : ஓரினச் சேர்க்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மத்திய, மாநில அமைச்சர்கள் விமர்சித்ததற்கு, தலைமை நீதிபதி, சதாசிவம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் மீது எந்த நடவடிக்கைக்கும், அவர் உத்தரவிடவில்லை.ஓரினச் சேர்க்கை தவறில்லை' என, 2009ல், டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு, டிசம்பர், 11ம் தேதி, 'ஓரினச் சேர்க்கை தவறு' என, பரபரப்பு தீர்ப்பை, அந்த நீதிமன்றம் வழங்கியது.இந்த உத்தரவை, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவானவர்கள், கடுமையாக எதிர்த்தனர். அது போல், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மத்திய அமைச்சர், மிலிந்த் தியோரா, ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஒமர் அப்துல்லா போன்றோர், கடுமையாக கண்டித்தனர். 'உச்சநீதிமன்ற தீர்ப்பை, பின்பற்ற வேண்டிய அமைச்சர்களே, அதை கண்டித்து பேசியது தவறு; அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இதிலிருந்து தெரிகிறது, பயம் பயம் ... பயம்,


இந்த வழக்கு, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: நிதியமைச்சரின் அறிக்கையில் பெரிய அளவில், எந்த தவறையும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால், பிறர், தேவையற்ற விதத்தில் பேசியுள்ளனர். இதில், நாம் என்ன சொல்ல முடியும்... அவர்களின் பேச்சு, நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதை மட்டும் தான் கூற முடியும்.அவர்களின் அறிக்கை, பேச்சு, பாராட்டும் விதத்தில் இல்லை. எனினும், மேற்கொண்டு, இந்த வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் விரும்பவில்லை.இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம், உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக