வியாழன், 9 ஜனவரி, 2014

அகிலேஷ் கவர்ச்சி நடிகைகளின் ஆட்டத்தால் மகிழ்ச்சி ! முசாபர்நகர் மக்கள் குளிரால் கண்ணீர் மழை !

உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மக்கள் குளிரால் நடுங்கி உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அது பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் பாலிவுட் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை அம்மாநிலத்தில் நடத்தி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான சல்மான்கான், தீபிகா படுகோனே மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் கலந்துகொண்டு அகிலேஷை மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்க வைத்தனர். அவரது இந்த செயல் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது ஆனால் அவர் இது பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் அரசு பணத்தை தண்ணீராக செலவிட்டு பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மேலும் இன்னும் திரைக்கே வராத மாதுரி தீட்சித் படமான தேஷ் இஷ்கியாவிற்கும், சைப் அலி கானின் புல்லட் ராஜா படத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தனது மாநிலத்தில் நடந்ததால் அவர்களுக்கு இப்பணமழையை பரிசாக வழங்கியிருக்கிறார்.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களை அழைத்துவர 7 தனி விமானங்களை அகிலேஷ் அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிக கவர்ச்சியான நிகழ்ச்சியை கண்டுகளித்த அம்மாநில முதல்வருக்கு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் டுவிட்டர் இணைய தளத்திலும் சகட்டு மேனிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மொத்தத்தில் அம்மாநில மக்களுக்கு கண்ணீர் மழை, அகிலேஷ் முகத்தில் கவர்ச்சி நடிகைகளின் ஆட்டத்தால் மகிழ்ச்சி அலைmaalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக