சனி, 11 ஜனவரி, 2014

மேலும் ஒரு நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு ! பெண் வக்கீல் பாலியல் புகார் ! காண்டம்ட் ஆப் கோர்ட்????

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு முன்னாள் நீதிபதி மீது மற்றொரு இளம் பெண் வக்கீல் பாலியல் புகார் கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி மீது அவரிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் வக்கீல் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு, கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தன. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியிலிருந்து கங்குலி ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு நீதிபதி மீது மற்றொரு இளம் பெண் வக்கீல் பாலியல் புகார் கூறியுள்ளார். மேலும் ஒரு நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு இதுவும் காண்டம்ட் ஆப் கோர்ட் அப்படீன்னு சொல்லாம இருந்தா சரி !

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் எஸ்.குமார். இவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருக்கிறார். இவரிடம் கடந்த 2011ம் ஆண்டு பயிற்சி பெற்ற இளம் பெண் வக்கீல் ஒருவர் தற்போது பாலியல் புகார் கூறியுள்ளார். ஓட்டல் அறைக்கு வரவழைத்து, இடுப்புக்கு கீழே பின்பக்கம் தட்டியதாகவும், கழுத்தில் முத்தமிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், ‘நீதிபதி மீது பெண் வக்கீல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு சமமானதாகும். பெண் வக்கீலின் புகார் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். கங்குலி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது போல் குமார் மீதான குற்றச்சாட்டினை விசாரிக்க நீதிபதிகள் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
-tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக