சனி, 11 ஜனவரி, 2014

கோபாலபுரத்தில் மீண்டும் மு.க. அழகிரி- தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்து ?


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அழைத்ததின் பேரில் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு விரைந்தார் மு.க.அழகிரி என்கிறது திமுக வட்டாரங்கள். மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினர். இதனால் திமுக தலைமை அதிருப்தி அடைந்தது. ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பையே கலைத்து பொறுப்புக் குழுவை நியமித்தது. இதைத் தொடர்ந்து தேமுதிகவுடனான திமுக கூட்டணி முயற்சிக்கு எதிராக அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அழகிரிக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற அழகிரி தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்தார். கருணாநிதியை அழகிரி குடும்பத்தினர் சந்தித்தனர். இந்நிலையில் அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இன்று திமுக தலைவரும் தனது தந்தையுமான மு.கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு மு.க.அழகிரி மீண்டும் சென்றுள்ளார். அவர் கருணாநிதியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவிப்பார் என்கிறது திமுக வட்டாரங்கள்.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக