ஞாயிறு, 12 ஜனவரி, 2014

பிரியாமணி: ஓரின சேர்க்கையாளர்களை நாம் குறை சொல்லக்கூடாது ! ஆதரிக்க வேண்டும். !

ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரியாமணி.ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது ‘ஃபயர்‘. இதில் நந்திதாதாஸ், ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். பெண்களுக்கு இடையேயான தவறான உறவை மையமாக வைத்து இயக்கினார் தீபா மேத்தா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே பாணியில் 2 இளம் பெண்களுக்கு இடையேயான தவறான உறவை சித்தரிக்கும் கதையாக தமிழில் ‘உன் பேர் சொல்ல ஆசை‘ என்ற படம் உருவாகிறது. காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வருவதுதானே தவிர பெண்ணுக்கும் பெண் ணுக்கும் வருவது அல்ல. அப்படி வந்தால் அது தவறான உறவுதான் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. >மஜீ.டி. இயக்கும் இப்படத்தை தாரிஸ்.பி.எஸ். தயாரிக்கிறார். ஷாலினி, சிவகாமி, பேசில், சத்தார் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். தனேஷ் ஒளிப்பதிவு. சிபு சுகுமாரன் ஒளிப்பதிவு. இதன் ஷூட்டிங் சென்னை, கோவளம், கேரளா போன்ற பகுதிகளில் நடந்துள்ளது.இதற்கிடையில் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய கலாசாரத்துக்கு பிரியாமணி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஓரின சேர்க்கையாளர்களை நாம் குறை சொல்லக்கூடாது. அத்தகைய சமூகத்தினரை நாம் ஆதரிக்க வேண்டும். இதற்கு எந்த துறையும் விலக்கில்லை என்றார்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக