வெள்ளி, 10 ஜனவரி, 2014

என்னதான் பேசுவதோ? பீகாரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை From Bala's assistant

அவன் இவன், பரதேசி என இயக்குனர் பாலா இயக்கிய அனைத்து படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ரவி. இவர் இயக்கும்  படம் ‘என்னதான் பேசுவதோ‘. தக்ஷா, விஜய் ராம் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  ரிலீஸ் நேற்று நடந்தது. அதில் இயக்குனர் ரவி பேசியதாவது:இயக்குனர் பாலாவுடன் தொடக்க காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். அவரே  என்னைப் பார்த்து, Ôபோய்யா போய் படம் டைரக்டு பண்ணுÕ என்றார். எப்போது நல்ல கதை கிடைக்கிறதோ அப்போதுதான் டைரக்டு செய்வேன் என்று  கூறினேன். அதற்கான கதைக்களம் கிடைத்தது.

அதுதான் இப்போது என்னதான் பேசுவதோ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். இக்கதையை கேட்டவர்கள் எல்லா கேரக்டர்களுக்கும் பிரபல  நடிகர்களை நடிக்க வையுங்கள் என்றனர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படத்தின் கதை புதுசு, கதைக்களம் புதுசு. பீகாரில் நடந்த  ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. எனவே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இதுவரை யாரும் பார்த்திராத முகங்களாக  இருக்க வேண்டும் என்று எண்ணி அனைவரையும் புதுமுகமாகவே நடிக்க வைத்தேன். டி.இமான் இசை அமைத்திருக்கிறார். ராமகிருஷ்ணன் வசனம்  எழுதி இருக்கிறார். - See .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக