புதன், 22 ஜனவரி, 2014

தர்ணாவாதி' கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: கிரண் பேடி


டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஒரு தர்ணாவாதி என்றும் அவர் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கேஜ்ரிவால் தற்போது நடத்தி வரும் போராட்டம் குறித்து ஒன் இந்தியா இணையதளத்துக்கு கிரண்பேடி அளித்த சிறப்புப் பேட்டி:
டெல்லியில் தற்போது முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? 
கிரண்பேடி: கேஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் அராஜகத்தையும் சட்ட ஒழுங்கு சீர்குலைவையுமே அதிகரிக்க செய்து வருகின்றனர். இது அழிவுக்குரியது. நிறுவனங்களின் மரியாதைகளை அவமதிக்கிறார்கள். கேஜ்ரிவால் தம்மை அராஜகவாதியாக அழைத்துக் கொள்வது கவலைக்குரியது. 'தர்ணாவாதி' கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: 
கிரண் பேடி 'எக்ஸ்க்யூசிவ்' பேட்டி! கேள்வி: கேஜ்ரிவாலின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லி மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? கிரண்பேடி: பொதுமக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை நம்பக் கூடாது. கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை ஒரு நல்ல 'தர்ணா' செயற்பாட்டாளர்.. மக்களை எப்படி அணிதிரட்டுவது என்பது அவருக்கு தெரியும். ஆனால் தர்ணா வேறு ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்பது வேறு... எப்படி பொறுமையாக இருப்பது என்பதை கேஜ்ரிவால் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி: தேர்தலின் போது தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாள் எப்படி நடந்து கொள்வார் என்பது மக்களுக்கு தெரியாது அல்லவா? கேஜ்ரிவாலை ஒரு மாற்றத்தின் அறிகுறியாகத்தானே பொதுமக்கள் பார்த்தார்கள்? கிரண்பேடி: எது சிறந்த மாற்று என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. டெல்லியைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சிதான் நல்ல மாற்று. கேள்வி: ஆனால் டெல்லியில் மக்களை கவர பாஜக தவறிவிட்டதே.. உட்கட்சி பிரச்சனைகளில் அது சிக்கியிருக்கிறதே? கிரண்பேடி: டெல்லியைப் பொறுத்தவரையில் பாஜக சிறப்பாகவே செயல்பட்டது.அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் நேர்மையான வேட்பாளர் கேள்வி: டெல்லியில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் பற்றி? பதில்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக வழக்கு பதிவு செய்ய வேண்டும். டெல்லி போலீசார் மிகவும் மென்மையாக நடந்து கொள்கின்றனர். ஆம் ஆத்மி அரசு, விசாரணை அறிக்கைகாக காத்திருக்க வேண்டும். கேள்வி: ஆம் ஆத்மிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே செயல்படுகிறதா? கிரண்படி: காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகவே கருதுகிறேன். இதனால் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/exclusive-kiran-bedi-lashes-at-kejriwal-calls-him-dharna-man-191816.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக