திங்கள், 20 ஜனவரி, 2014

பாதயாத்திரை மூலம் உருவான தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை



The Tellippalai Trail Cancer Hospital  டிரைல் அமைப்பு  தேவேந்­திர  முனை­யி­லி­ருந்து  பருத்­தித்­துறை வரை பாத­யாத்­தி­ரை­யொன்றை நடத்தி தெல்­லிப்­ப­ழையில் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை நிர்­மா­ணித்­துள்­ள­து.
மனி­தனை ஆட்­டிப்­ப­டைக்கும் பல்­வேறு  மோச­மான நோய்கள்   இருந்­தாலும் – மர­ணிக்­கும் தினத்தை முன்­கூட்டியே அறிவித்­து­விட்டு  கொஞ்­ச­­ம்  கொஞ்­ச­மாக  கொல்லும்  ஒரே நோய் புற்­று­நோ­யா­கத்தான் இருக்கும். இலங்­கை­யிலும் புற்­று­நோயின் ஆதிக்கம் வரு­டாந்தம் அதி­க­ரித்து வரு­கி­றது.
வரு­டாந்தம் 15 ஆயிரம் பேர் வரை புற்று நோய்க்கு இலக்­காகி வரு­கின்­றனர். இந்நோயுடன் வாழும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இந்த டிரைல் அமைப்பு இலங்கையில் தென்பகுதியில் அமைந்துள்ள தேவேந்­திர முனை­யி­லி­ருந்து பருத்­தித்­துறை வரை பாத­யாத்­தி­ரை­யொன்றை நடத்தி தெல்­லிப்­ப­ழையில் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை நிர்­மா­ணித்­துள்­ள­து.

இன்று  19 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால்   இவ்வைத்­தி­ய­சாலை திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இது குறித்து   டிரைல் அமைப்பின் ஸ்தா­ப­கர்­களில்   ஒரு­வரும் மாஸ் இன்­டிமேட் நிறு­வன பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான நாதன் சிவகன­நா­த­னுடன் நடத்­தப்பட்ட  செவ்­வி­யொன்­றி­­லேயே அவர் இக்­கேள்­வி­க­ளுக்­கான பதி­­லைத் தெரி­வித்­தார்.
கேள்வி: புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையை அமைப்­ப­தற்­காக பாத­யாத்­திரை சென்று நிதி திரட்டும் எண்ணம் எப்­படி உங்க­ளுக்கு உருவானது ?
பதில்: யுத்தம் முடி­வ­டைந்து நாட்டில் சமா­தானம்  ஏற்­பட்டால்  தேவேந்­தி­ர­மு­னை­யி­லி­ருந்து பருத்­தித்­துறை வரை பாதணி எது­வு­மின்றி நடக்­கப்­போ­வ­தாக எனது நண்­ப­ரான சரித்த உணம்பு  (Sarinda Unamboowa) என்னிடம் ஒருதடவை கூறி­யி­ருந்தார்
Sarinda Unamboowaஎன்னிடம் ஒரு­த­டவை கூறி­யி­ருந்தார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­தது. அந்த மகிழ்ச்­சியை கொண்­டா­டு­வ­தற்­காக 2011 இல் பாத­யாத்­திரை செல்ல அவர் திட்­ட­மிட்டார். அவ­ருடன் நானு­ம் பருத்­தித்­துறை வரை நடப்­ப­தற்கு உடன்­பட்டேன்.
2006 ஆம் ஆண்டு எனது சகோ­தரி பாரிய புற்­று­நோ­யினால் இறந்தார். இத­னைக்­க­­ருத்திற் கொண்டு பாத­யாத்­தி­ரையின் மூலம் நிதியை திரட்­டி அத­னூடாக புற்­றுநோயாளர்­க­ளுக்கு உதவ முன்­வந்­தோம்.
இந்த நிலையில் நாம் 2008 இல்  கலர்ஸ் ஒப் கரேஜ் என்ற பெயரில்  நிதி­ய­மொன்றை அமைத்து அத­னூ­டாக புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு உதவி செய்து வந்தோம். ஆனால் இதற்கு குறைந்­த­ளவு நிதியே சேர்ந்­தது. இதனைப் பயன்­ப­டுத்தி 2010 ஆம் ஆண்டு  மஹ­ர­கம புற்று நோய்­ வைத்­தி­ய­சா­லையில் மருத்­துவ அவ­சர சிகிச்சைப் பிரி­­வொன்றை நிர்­மாணிக்க நட­வ­டிக்கை எடுத்தோம். அதன் அடுத்த இலக்­கா­கவே புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை கட்டும் நோக்கம் எமக்கு உரு­வா­ன­து.
கேள்வி: இப்புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையை யாழ்ப்­பா­ணத்தில் நிர்­மா­ணிப்பதற்கான விசேட கார­ண­ம் என்ன ?

பதில்: இலங்­கையில் குறிப்­பாக மஹ­ர­க­மவில்   மட்­டுமே புற்­றுநோய் வைத்­தி­ய­சாலை இருக்­கி­றது. வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் இருந்து வரும் புற்று நோயா­ளர்கள் குடும்­பத்­துடன் இங்கு வந்து தங்­கியே சிகிச்சை பெற நேரி­டு­கி­றது. சில பெற்­றோர்கள் தமது பிள்­ளை­க­ளுக்­காக தொழி­லையும் விட்டு விலகி மூன்று நான்கு மாதங்­களாக வைத்­தி­ய­சா­லையில் தங்­கு­வதுண்டு.
இவர்­களின் குடும்ப கட்­ட­மைப்­புக்கள் சிதை­வ­தோடு வரு­மான வழி­களும் தடைப்­பட்டு வரு­கின்­றது. யுத்த காலத்தில் வட­ப­கு­தி­யி­லுள்ள புற்று நோயா­ளர்கள் சிகிச்சை பெற முடி­யாமல் பெரும் கஷ்­டங்­க­ளுக்கு ஆளா­கின்­றார்கள். இதனாலே தெல்­லிப்பழையில் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை அமைக்க முடிவு செய்தோம்.
கேள்வி: பாத­யாத்­திரை சென்று பெரு­ம­ளவு நிதி திரட்­டு­வது என்பது கடினமான விடயம். எவ்­வாறு இது சாத்­தி­ய­மா­ன­து-?

பதில்: சுமார் பத்து பேர் வரையில் சேர்ந்தே தேவேந்­திர முனை­யி­லி­ருந்து பருத்­தித்­துறை வரை நடப்­ப­தற்கு முதலில் திட்­ட­மிட்டோம். ஒரு மில்­லியன் டொலர் திரட்­டு­வதே எமது இலக்­காக இருந்­தது. இதற்­காக அனு­ச­ரணை பெறபலரை நாடி­னாலும் யாரும் முன்­வ­ர­வில்லை. இதனால் 2011 ஜன­வரி மாதத்தில் பாத­யாத்­திரை செல்லும் எமது திட்­டத்தை உரிய காலத்தில் ஆரம்­பிக்க முடி­ய­வில்லை.
இது குறித்து நானும்  எனது நண்பன்  உனம்­புவும் நாம் பணி­பு­ரியும் மாஸ் ஹோல்டிங் கம்­ப­னியில் வைத்து பக­லு­ணவு வேளையில் கதைத்துக் கொண்­டி­ருந்தோம். இந்த விட­யத்தை அறிந்த எனது நிறு­வன ஸ்தா­பகர் மகேஷ் அமலியன் உட­ன­டி­யாக 10 மில்­லியன் ரூபா இதற்­காக வழங்­கினார். மொபி­டெல்  நிறு­வனம்  விளம்­ப­ரங்­க­ளி­­­னூ­டாக 20 மில்­லியன் ரூபா வழங்க முன்­வந்­த­­து.

கேள்வி: புற்­றுநோய் வைத்­தி­ய­சாலை அமைக்க பாத­யாத்­திரை மூலம் மட்­டுமா நிதி திரட்­டப்­பட்­டது ?

பதில்: இல்லை. இதற்­கென டிரைல் என்ற பெயரில் வித்­தி­யா­ச­மான இணையத்­த­ள­மொன்று உரு­வாக்­கப்­பட்­டது. உலகம் பூராக­­வும் இரு­ந்து சுமார் 35 ஆயிரம் பேர் இதில் இணைந்து தமது பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தனர். பாத­யாத்­தி­ரையில் பங்­கு­பற்ற விரும்­பு­ப­வர்­களும் இதில் தம்மை பதிவு செய்து கொண்­டனர். இணையத்­த­ளத்­தி­னூ­டாக இந்த சமூக சேவை குறித்து பர­வ­­லாக பிர­ப­ல­ம­டைந்­தது. இத­னூடாக சுமார் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை திரட்ட முடிந்­த­து.
கேள்வி: தேவேந்­தி­ர­மு­­னையிலிருந்து பருத்­தித்­துறை வரை­யான பாத­யாத்­திரை எப்­படி வெற்­றி­ய­ளித்­தது. எத்­த­கையோர் இதற்குப் பங்­க­ளித்­தனர் ?
பதில்: இப் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலரைத் திரட்டும் நோக்கத்துடன் இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள தெய்வேந்திர முனையிலிருந்து வடபகுதி பருத்தித்துறை முனை வரை 670 கிலோ மீற்றர் வரை நான் உட்பட 11 பேர் மட்டுமே தான் முழுமையாக நடந்தோம். 35 ஆயிரம் பேர் இந்தப் பாத­யாத்­தி­ரையில் ஈடு­பட்­டனர். இது தவிர 250.000 பேர் வீதி­யோரம் இருந்து வேறு வழி­க­ளிலும் இதற்கு தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். முப்­ப­டை­யி­னரும் எமக்கு உத­வி­­யுள்­ளனர்.
உண்­டியல் மூலமும் நிதி சேக­ரிக்­கப்­பட்டது. ஒரு ரூபா முதல் பல்­வேறு தொகையை முடிந்­த­ளவில் மக்கள் வழங்­கி­யி­­ருந்­தனர். இவ்­வா­றாக மாத்­திரம் 10 மில்­லியன் ரூபா திரட்ட முடிந்­த­து.
ரட்னா ரெட்டி ஐட்கென் ஸ்பென்ஸ் அன்ட் கம்பனி விமிட்டட்டின் தலைவர் சிவரட்னம் என்பவரின் மனைவி மெரோபி ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய்க்குபலியாகியிருந்தார். . மற்றும் அவர்களின் மகன் மொமேஷையும் புற்றுநோய் பலிகொண்டிருந்ததனால் இவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நன்கொடை கொடுத்துதவினார்கள்..
யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மீள்­கு­டி­யே­றிய எது­வித வச­தி­களும் அற்ற மக்கள் முதற்கொண்டு பிச்­­சைக்­காரன் வரை புற்­றுநோய் வைத்­தி­ய­சாலையை கட்ட பங்­க­ளித்­தி­ருப்­பது ஒரு விசேட அம்­ச­மாகும். ஊர்­வ­லத்தில் எடுத்துச் செல்­லப்­பட்ட பாரிய உண்­டி­யலில் வவு­னி­யாவில் வைத்துப் பிச்­சைக்­காரர் ஒருவர் ஒரு ரூபா இட்­ட­து அனை­வ­­ரையும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யது. இத்­த­னைக்கும் அவர் ஒரு அங்­க­வீ­னர்.
இதே­போன்று குரு­நாகல் யாப்­ப­கூவ பகு­தியில் வைத்து வறிய சிறுமி ஒருத்தி வீட்டில் பணம் சேர்த்­த உண்­டி­யலை பாத­யாத்­தி­ரையில் சென்ற மஹேல ஜெய­வர்த்­த­ன­விடம் கொடுத்தார்.
கிளி­நொச்­சியில் காலை 6 மணிக்கு எமது பாத­யாத்­திரை ஆரம்­பிக்­கப்­பட்­டது. மீள்­கு­டி­யேற்­றப்­பட்டு கொட்­டிலில் வாழும் மூன்று சிறு பிள்­ளைகள் நூறு ரூபாவொன்றை அன்­ப­ளித்­­தது பாத­யாத்­தி­ரையில் சென்­ற­வர்­களை கண்­க­லங்க வைத்­தது.
பாத­யாத்­திரை முடி­வ­டைந்து ஒரு வரு­டத்தின் பின்னர் அந்த குழந்­தை­களை ஒவ்வொ­ரு­வ­ரை­யும் தேடிப்­பி­டித்து கற்­ப­தற்குத் தேவை­யான வச­தி­க­ளை அவர்­க­ளுக்கு பெற்று கொடுத்தோம். அவர்­க­ளு­டைய பெற்­றோ­ருக்கும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்­துள்ளோம்.
இந்த யாத்­தி­ரையின் போது சிங்­களம், தமிழ் , முஸ்லிம் , சிறிஸ்­தவர் என்ற பாகு­பா­டின்றி சகல இன மதத்­த­வர்­களும் தமது பங்­க­ளிப்பை இன்­மு­கத்­துடன் வழங்­கி­யி­ருந்­தனர். இலங்­கையில் சக­ல­ரதும் பங்­க­ளிப்­புடன் பாத­யாத்­திரை மூலம் வைத்­தி­ய­சா­லை­யொன்றை கட்டியி­ருப்­பது இதுதான் முதற்­­த­ட­வை எனலாம். ஒரு இலட்சம் ரூபா காசோ­லையை விட ஒரு ரூபா அன்­ப­ளிப்பே எமக்குப் பெறு­ம­தி­யாகத் தோன்­றி­யது.
இது தவிர நாட்டில் அநே­க­மான மக்­க­ளுக்கு புற்­றுநோய் குறித்து விழிப்­பு­ணர்­வூட்ட இந்தப் பாத­யாத்­திரை பெரும் வாய்ப்­பாக அமைந்­தது.
கேள்வி: டிரைல் பாத­யாத்­திரை மூலம் வேறு என்ன நன்மை கிடைத்­த­து ?
பதில் : வட­ப­குதி மக்­க­ளுக்­காக தென்­ப­குதி மக்கள் இவ்­வாறு உத­வு­வார்­கள் என யாரும் நம்­பி­யி­ருக்­க­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்து சில மாதங்­க­ளிலே இந்த பாத­யாத்­திரை நடந்­தது. ஆனால் தென்­ப­குதி மக்கள் ஆர்­வ­மாக இதற்கு உத­வினர். முடிந்­த­ளவு பணத்­தாலும் பொரு­ளா­லும் பங்­க­ளித்­தனர். முடி­யா­த­வர்கள் உள்­ளத்தால் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தினர். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­­­லு­றவை ஏற்­ப­டுத்­த­வும் இது உத­வி­யது.
கேள்வி: டிரைல் தெல்­லிப்­பழை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் தற்­போ­தைய நிலை என்ன ?
பதில்: 2012 ஜூலை மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட புற்­றுநோய் வைத்­தி­யசாலை நிர்­மா­ணப்­ப­ணிகள் நிறைவடைந்­துள்­ளன. 300 மில்­லியன் ரூபா செலவில் 5 ஏக்கர்
15 ஆயிரம் சதுர அடி விஸ்தீரணம் கொண்டதாக இவ் வைத்­தி­ய­சா­லை ­அ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 120 கட்­டில்­க­­ளுடன் கூடிய இந்த வைத்­தி­ய­சாலை சிறு­வர்­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மான வச­திகள் செய்­யப்­பட்­டுள்­ளன. வைத்­தி­ய­சா­லைக்குத் தேவை­யான உப­க­ர­ணங்­களை பலர் இலவ­ச­மாக வழங்­கி­னர்.
அர­சாங்கம் இரு நவீன உப­க­ர­­ணங்­களை தரு­விக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இதற்­கென தனி­யான பிரி­வொன்றை நிர்­மா­ணிக்க அர­சாங்கம் தயா­ரா­கி­றது. எதிர்­வரும் 19 ஆம் திகதி வைத்­தி­சா­லையை நாம் அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கிறோம். ஜனா­தி­பதி இதனைத் திறந்து வைக்­க­வுள்ளார்.
இரு நவீன உப­க­ர­ணங்­களும் இங்கு பொருத்­தப்­பட்ட பின்னர் மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­­ய­சா­லை­யை­விட நவீன வச­திகள் கொண்­ட­­தாக டிரைல் தெல்­லிப்­ப­ழை வைத்­தி­யசாலை இயங்கும். வட­ப­குதி மக்­க­ளுக்கு இனி கொழும்­புக்கு வர வேண்டிய தேவை ஏற்­ப­டா­து.
கேள்வி: புற்­று­நோய்க்கு எதி­ரான உங்கள் முதல் வெற்­றியையடுத்து அடுத்த திட்டம் என்ன என்பது பற்றி கூறமுடியுமா -?
பதில்: வடக்­கி­லி­ருந்து தெற்­கு­வரை பாத­யாத்­திரை சென்று தெற்கில் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­­­யொ­ன்றை நிர்­மா­ணிப்­பதே எமது அடுத்த இலக்­காகும். இதற்கும் சக­லரும் பங்­க­ளிப்பர் என நம்­பு­கின்றோம். நாம் தெல்­லிப்­பழைவைத்தி­ய­சா­லையை அமைக்க பங்­க­ளித்­தாலும் எமது பெயர் வைத்­தி­ய­சா­­லையில் எங்கும் பதி­யப்­ப­ட­வில்லை. சமூ­கத்­துக்கு எம்மால் முடிந்த பங்­க­ளிப்­பையே வழங்­கியுள்ளோம் என தெரி­வித்தார்.

முக்கிய குறிப்பு


வெளிநாடுகளில்..  புலம்பெயர்  தமிழர்கள்   10 இலச்சம்  பேர்  இருக்கிறார்களாம். இதுவரை   நாட்டுக்காக,  ஊருக்காக  என்ன   செய்திருக்கின்றார்கள்? (தங்களுடைய  சொந்தக்காரர்களுக்கு  செய்ததை  தவிர்த்து)
யாருக்காவது  ஒரு  ஏழையானவனுக்கு  வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்களா?  ஆகக்குறைந்தது  ஒரு  வெத்திலைக்கடையாவது போட்டுக்கொடுத்திருக்கிறார்களா?     தமிழகத்திலிருக்கும்  போலி   அரசியல்வாதிகளுக்கும்,  சினிமாகாராகளுக்கும்,  வெளிநாடுகளிலிருந்து   ஊரை  முறிச்சு   திண்டு,  பிழைப்பு  நடத்துகிற   புலிப்பினாமிகளுக்கும்,  பூசாரிகளுக்கும்   அள்ளிக்   காசைக்கொடுத்து   அவர்களை  வாழவைத்ததை  தவிர  வேறெதை  செய்தார்கள்?
வெளிநாட்டில்  உள்ளவர்கள்  என்ன சாதனை செய்தார்கள் என்றால்? புலிகளுக்கு  காசுக்குமேல்  காசுகொடுத்து   அவர்களுடைய  போராட்டத்தையும்  கெடுத்தார்கள்.ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக