சனி, 11 ஜனவரி, 2014

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார் ! அண்ணன் மகன் திடுக்கிடும் குற்றச்சாட்டு !



சென்னை,பழம்பெரும் நடிகை மனோரமா மீது, அவரது அண்ணன் மகன் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
அண்ணன் மகன்
பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவதுதமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.
நான் கிட்டுவின் மகன். எனது உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசிக்கிறேன். நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையில் இருக்கிறோம். நான் வாடகை கார் ஓட்டி பிழைக்கிறேன். எனது தங்கை வீட்டு வேலை செய்கிறாள். எனது அண்ணன் கொத்தனார் வேலை செய்கிறான். மனோரமா அத்தை மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் பெரியப்பா குடும்பத்திற்கும் நிறைய நல்லது செய்துள்ளார்.
நிலத்தை அபகரித்து விட்டார்
எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் ஆறரை கிரவுண்டு நிலம் இருந்தது. அந்த நிலம் 1965&ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலம் பல கோடி மதிப்புடையது. கார் சர்வீஸ் நிறுவனம் அதில் உள்ளது. அதை மாதம் ரூ.1 லட்சத்திற்கு அத்தை மனோரமா வாடகைக்கு விட்டுள்ளார்.
பாட்டி பெயரில் இருந்த அந்த நிலம் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமானது. அந்த நிலத்தை யாருக்கும் சொல்லாமல், அத்தை மனோரமா அவரது பெயரில் மாற்றிக்கொண்டார். இது சட்ட விரோதமானது. பாட்டி பெயரில் அந்த நிலம் இருந்ததற்கான ஆதாரங்கள், உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே அத்தை மனோரமா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.
கொலை மிரட்டல்
நான் போலீசில் புகார் கொடுத்தது தெரிந்து, எனக்கு போனில் பேசி நிறைய கொலை மிரட்டல் வருகிறது. போலீசார்தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு காசிநாதன் தெரிவித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மனோரமா பதிலடி
காசிநாதன் கொடுத்த புகார் மனு பற்றி நடிகை மனோரமாவிடம், தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.நான் சம்பாதித்த சொத்தை, நானே அபகரித்து விட்டேன் என்று சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். யாரும் நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் பணம் பறிப்பதற்காக, இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காசிநாதன் எனது அண்ணன் மகன்தான்.இவ்வாறு மனோரமா தெரிவித்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக