புதன், 8 ஜனவரி, 2014

கலைஞர் - அழகிரி சந்திப்பு ! புதிய மதுரை திமுக பொறுப்பாளர்கள் கலைஞரை சந்தித்து பேசினா்

திமுக தலைவர் கலைஞரை திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.மு.க.அழகிரிக்கு வரும் 30ம் தேதி பிறந்த நாள்.   இதையொட்டி மதுரை முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து சொல்லி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதுதான் திமுகவில் பெரும் பிரச்சனையை கிளப்பியது.   வாழ்த்து போஸ்டரில்,  சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பங்கேற்காத அழகிரியை, பங்கேற்றது மாதிரி போஸ்டர் ஒட்டியிருந்தனர்.  இது கட்சி தலைமையை எரிச்சல டையச்செய்தது.இதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்தார்.   இதையடுத்து நடைபெற்ற சில சம்பவங்களால் மதுரை திமுகவையே கூண்டோடு களைத்துவிட்டு,  புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் கலைஞர்.இந்நிலையில்,  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  தேமுதிக திமுகவுடன் சேரவேண்டாம்.
விஜயகாந்தை ஒரு அரசியல் தலைவராகவே மதிப்பதில்லை என்கிற ரீதியில் அழகிரி பேட்டி கொடுத்து தலைமையை சூடேற்றினார்கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யார் பேசினாலும் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று கலைஞர் எச்சரித்தார்.  மேலும்,  அழகிரி அப்படி பேசியது வருந்தத்தக்கது என்றும் கூறினார்.  இந்த சூழ்நிலையில்,  நேற்று மதுரைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட திமுக பொறுப்பாளர்கள் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அழகிரி, இன்று கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.  
nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக