வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு நாளைக்கு வேளை குளித்தாலும்ஆறு வேளை வழிபட்டாலும் அவர் சங்கராச்சாரியாக முடியாது;
ஒரு பார்ப்பனர்
3 மாதம் குளிக்காமல் இருந்தாலும்
கொலை, கொள்ளையில் ஈடுபட்டாலும்
அவரை தீண்டாமைக்குள் கொண்டு வரமுடியாது.
பிறக்கும்போதே ஜாதியுடன்
புனிதமும் தீண்டாமையும் பிறக்கிறது.
இது மனுவின் சட்டம். அது கயர்லாஞ்சியோ தர்மபுரியோ
ஜாதி வன்கொடுமைக்கு ஆளான
தாழ்த்தப்பட்டவரையே தண்டிப்பதும்..
ஹரியானாவோ பாண்டிச்சேரியோ
கொலை செய்தாலும்
சாட்சியில்லை என்று
பார்ப்பனரை விடுவிப்பதும் இன்றைய நவீன சட்டம். ஜாதியை வெட்டி துண்டாக்கினால்
அதற்குள்ளும் ஜாதி..
பரம்பொருளைப் போல் எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறான் மனு.
படத்தில் இருப்பவர் மனு அல்ல; அவரை மனுவாக புரிந்து கொண்டால் தவறுமில்லை. மனுவின் latest வடிவமான modi ்.
சங்கரர்கள் ஆதியிலும் அப்படிதான் நவீனத்திலும் அதேபோல்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக