புதன், 1 ஜனவரி, 2014

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த தியாகத்தையும் செய்வேன் : லாலு பிரசாத் யாதவ்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவ் நேற்று சந்தித்து பேசினார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் லாலு நேற்று சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கூட்டணி பற்றி ஆலோசிப்பதற்காக இம்மாதம் மீண்டும் என்னை சந்திப்பதாக சோனியா கூறியுள்ளார்.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி இடையே இம்முறை கண்டிப்பாக கூட்டணி ஏற்படும். பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மதவாத சக்திகள் நடை போடுவதை இக்கூட்டணி தடுத்து நிறுத்தும். அது அதிகாரத்தில் அமர்வதை, எந்த விலை கொடுத்தாவது தடுப்போம். அதுதான் எனது கனவு.

காங்கிரஸ் அகில இந்திய கட்சி மட்டுமின்றி, மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி. அதன் தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்று சேர்ப்போம். காங்கிரசுடன் எப்போதும் நாங்கள் கூட்டணியாக இருப்போம். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் உடனான கூட்டணியை 2009ல் முறித்து கொண்டது போன்ற தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன்.

நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலை விட ராகுல் காந்தி பல லட்சம் மடங்கு சிறந்தவர். இவ்வாறு லாலு கூறினார்.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக