வியாழன், 9 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல்: இந்து (BJP) ரக்‌ஷா தள ஒருங்கிணைப்பாளர் உள்பட 12 பேர் கைது

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுவது குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காசியாபாத்தில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதுடன் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் ரகசிய கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தன. இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் இந்து ரக்‌ஷா தள தேசிய ஒருங்கிணைப்பாளர் பிங்கி சவுத்ரி உள்பட 12 பேரை கைதுசெய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிங்கி சவுத்ரி கைதானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இந்திராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் தடியடி நடத்தி களைத்தனர்.  malaimalar .com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக