வியாழன், 23 ஜனவரி, 2014

2005 ஆண்டுக்குமுந்தய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றவும் ரிசேர்வ் வங்கி வேண்டுகோள்

2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கிமும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய் நோட்டுக்களை வருகிற மார்ச் மாதத்திற்கு பின்னர் பொது பரிவர்த்தனைக்கு, அதாவது கடைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஆனால் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை, வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பொதுமக்கள், அது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக