வியாழன், 23 ஜனவரி, 2014

மே . வங்கம் :காதலித்ததால் பெண்ணுக்கு பஞ்சாயத்தில் பாலியல் வல்லுறவு தண்டனை ! தலைவர் உட்பட 12 முதியவர்கள் சேர்ந்து கற்பழித்தனர்

இந்தியாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கிராம தலைவர் உட்பட 12 பேரால், இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மா வட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு கிராம தலைவர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தலைவர் கூறினார்.
அதை தொடர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். கற்பழித்தனர்
அவர் கதறி அழுத போதும் விடவில்லை. ஊர் பஞ்சாயத்தார் உள்பட 12 பேர் சேர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.
மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண் அருகில் உள்ள சுரிசதார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தன்னை கிராம தலைவர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் பலாத்காரம் செய்ததாக சபல்பூல் பொலிசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவம் நடத்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய கிராம தலைவர் உள்பட மற்றவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக