செவ்வாய், 3 டிசம்பர், 2013

தெலுங்கானாவுடன் அனந்தபூர் கர்னுல் மாவட்டங்களை இணைக்க முடிவு ! TRS க்கு செக் வைக்க திடீர் முடிவு ?

ஐதராபாத் : புதிதாக அமைக்கப்படவுள்ள, தெலுங்கானா மாநிலத்தில், ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கிளம்பியுள்ள தகவலால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளை உருவாக்குவது தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஐதராபாத் உட்பட, தெலுங்கானாவில் உள்ள, 10 மாவட்டங்கள் மற்றும் ராயலசீமாவை சேர்ந்த அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைத்து, "ராயல தெலுங்கானா' என்ற பெயரில் மாநிலம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியா, இரண்டு மாவட்டங்களை இணைப்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில், தலா, 21 லோக்சபா தொகுதிகள், தலா, 147 சட்டசபை தொகுதிகள் இருக்கும்   சீமந்த்ராவிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள திருப்பதி,சித்தூர் மாவட்டங்களை மிக அருகிலுள்ள தமிழ்நாட்டுடன் சேர்க்கலாம்.இதனால் திருப்பதி,சித்தூர் மாவட்ட மக்களுக்கு கல்வி,பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் மிகவும் நன்மையாக இருக்கும் .இப்பகுதி மக்கள் சிந்தித்து செயல்பட்டால் பயனடையலாம்.
என, தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் செல்வாக்கிற்கு, "செக்' வைக்க, இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. மேலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலும், ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, இந்த கடைசி நேர மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக