புதன், 25 டிசம்பர், 2013

இரண்டாம் உலகம் - விலகியது மகிழ்ச்சி - ஹாரிஸ்! இரண்டாம் உலகம் ரசிகர்களுக்கு புரியாது?

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த என்றென்றும் புன்னகை
திரைப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகிவிட்ட நிலையில், சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவில் மாபெரும் வெற்றிபெற்றுவிட்டது. என்றென்றும் புன்னகை திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த என்றென்றும் புன்னகை படக்குழு ரசிகர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் “என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் கமிட் ஆனபோது நான் இன்னொரு மெகாபட்ஜெட் திரைப்படத்தில்(இரண்டாம் உலகம்) பணியாற்றினேன். இரு திரைப்படங்களும் வெவ்வேறு விதமானவை என்பதால் ஒரே சமயத்தில் இரு படங்களிலும் பணியாற்றமுடியவில்லை.
அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றினால் என்றென்றும் புன்னகை ஒரு வருடம் தள்ளிப்போகும் நிலைக்குத்தள்ளப்படும் என்பதால் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்.

அந்த படத்தின் தயாரிப்பாளர்களை அழைத்து நான் இந்த படத்திலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். திரைப்படங்கள் என்பவை ரசிகர்களுக்கு மிக நெருக்கமானவை ஆகிவிட்டன. ஒரு படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் அதிகம் யோசிக்கக்கூடாது. அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும் திரைப்படங்களை தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் அஹமதின் என்றென்றும் புன்னகை. எனவே நான் அந்த படத்திலிருந்து விலகி, என்றென்றும் புன்னகை படத்திற்கு இசையமைத்ததற்காக  மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

இரண்டாம் உலகம் ரசிகர்களுக்கு புரியாது, எதிர்பார்த்த வெற்றியை தராது என்று தெரிந்தே ஹாரிஸ் அந்த படத்திலிருந்து விலகியது போன்று பேசியது தமிழ்த்திரையுலகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வெளிநாட்டில் ரூம்போட்டு பாடல்களுக்கு இசையமைத்த போது புரிந்த கதை, பிண்ணனி இசையமைப்பின்போது மட்டும் புரியாமல் போய்விட்டதா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம் cinema.nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக