திங்கள், 9 டிசம்பர், 2013

டெல்லியில் தேமுதிக வேட்பாளர்களின் வாக்கு விபரம் ! விஜயகாந்தின் ராஜதந்திரம் ?

தொகுதி வேட்பாளர் வாக்குகள்
புது தில்லி ஜி.எஸ். மணி 205
ஷகுர் பஸ்தி ஆர். செங்கோட்டையன் 151
கல்காஜி ராமு 172
ஜங்புரா சிவா 256
ஜனக்புரி ஸ்வர்ணா 110
மாளவியா நகர் ஷர்மிளா 184
ராஜேந்தர் நகர் பி.டி. தானப்பன் 152
ஆர்.கே. புரம் எஸ்.டி. பிரகாஷ் 165
திரி நகர் எம்.எஸ். சுப்ரமணியன் 298
வாஸிர்பூர் ஈஸ்வரி 362
பாலம் பி. ரத்தினம் 230

தமிழகத் தேர்தலின் போது விஜயகாந்த் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புத் தேர்தல் பிரசார வேன் தில்லிக்குக் கொண்டுவரப்பட்டு அதில் தேமுதிக தொண்டர் படையின் பாதுகாப்புடன் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இந் நிலையில், அவரது பிரசாரத்தைப் பார்வையிட வந்த தமிழர்கள்கூட அவரது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துவதாக உள்ளது.
தில்லி பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியைத் தழுவியது.
11 தொகுதிகளிலும் அக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 2,285 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவைகூட தில்லி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, 11 தொகுதிகளில் வேட்பாளர்களை தேமுதிக தலைமை களமிறக்கியது. தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை அறிந்தும், தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்காக தில்லி தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இம் முடிவை தில்லி தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட சில தமிழ் அமைப்புகள்கூட விமர்சனம் செய்தன. அதைப் பொருள்படுத்தாமல், தில்லியில் கடந்த அக்டோபர் 27 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மாநில, மாவட்ட நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் 11 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
தேமுதிக தலைவர்கள் பங்கேற்ற ஜந்தர் மந்தர் பொதுக்கூட்டத்தைப் பார்வையிட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் வந்தனர். புது தில்லி, ஷகுர் பஸ்தி, கல்காஜி, ஜங்புரா, வாஸிர்பூர், ஜனக்புரி, மாளவியா நகர், ராஜேந்தர் நகர், ஆர்.கே. புரம், பாலம், திரி நகர் ஆகிய 11 தொகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களிலும் விஜயகாந்த், பிரேமலதா, இளைஞரணித் தலைவர் சுதீஷ் உள்ளிட்டோரின் பேச்சை ஏராளமான தமிழர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
தமிழகத் தேர்தலின் போது விஜயகாந்த் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புத் தேர்தல் பிரசார வேன் தில்லிக்குக் கொண்டுவரப்பட்டு அதில் தேமுதிக தொண்டர் படையின் பாதுகாப்புடன் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இந் நிலையில், அவரது பிரசாரத்தைப் பார்வையிட வந்த தமிழர்கள்கூட அவரது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துவதாக உள்ளது.  dinamani .com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக