செவ்வாய், 10 டிசம்பர், 2013

மணி சங்கர் அய்யர் :மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்கியது மாபெரும் தவறு

டெல்லி: மன்மோகன் சிங்கை இரண்டாவது முறையாக பிரதமராக்கியது மாபெரும் தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறியுள்ளது அக்கட்சிக்குள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான மணி சங்கர் அய்யர் பிரதமர் மன்மோகன் சிங் மீது பகிரங்க தாக்குதலை தொடுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்கியது தவறு என அவர் கூறியுள்ளார். இதை அப்போதே தாம் சுட்டிக்காட்டிய போது கட்சியில் ஒருவரும் தமது கருத்தை ஏற்கவில்லை என்று மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார். கட்சியை முழுவதுமாக சீர்திருத்தி மாற்றி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர் தேவைப்பட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் காங்கிரஸ் தயங்கக் கூடாது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக