வியாழன், 26 டிசம்பர், 2013

நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது

நய்யாண்டி பிரச்சனைக்குப் பிறகு, நஸ்ரியாவை தமிழ்த்திரையுலகமே ஒதுக்கிவிடுமோ? என்று பதட்டப்பட்டார்கள், ராஜா ராணி படத்தின் மூலம் நஸ்ரியாவின் தீவிர ரசிகர்களகளாகிவிட்டவர்கள். ஆனால் திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகத்தை விட்டு நான் செல்லவில்லை என்று நஸ்ரியா சொல்லாமல் சொன்னாலும் நய்யாண்டி பிரச்சனை நஸ்ரியாவை விட்டுவிடாமல் பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ‘சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு தான் நிகழ்ச்சியையே துவங்குகிறார்கள். ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் நய்யாண்டி திரைப்படம் குறித்த கேள்விக்கு நஸ்ரியா “நய்யாண்டி திரைப்படத்தினால் உண்டான பிரச்சனையால் நான் எப்படிப்பட்ட நடிகை என்பது திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் தெரிந்துவிட்டது. இனி என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் முன்பே நான் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று முடிவெடுத்துவிடுவார்கள். இதனால் நான் கதை கேட்டு அதன்பின்பு வேண்டாம் என்று தவிர்க்க தேவையிருக்காது.  இந்த வகையில் நய்யாண்டி பிரச்ச்னை நல்லதே செய்திருக்கிறது” என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக