ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லி காங்கிரஸ் தோல்வி ! காரணங்கள் :மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம்! காமன்வெல்த் ஊழல் !


கடந்த 04.12.2013 அன்று நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழல், டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசிய விவகாரம், ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு உயர்ந்தது ஆகிய 3 முக்கிய காரணங்கள்தான் என்று அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிறது.
டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், ஷீலா தீட்சித் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை டெல்லி கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
1998ல் நடைபெற்ற தேர்தலில், வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பாஜக ஆட்சியை இழந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 1998ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஷீலா தீட்சி முதல் அமைச்சராக பதவியேற்றார். இந்திராகாந்தி குடும்பத்திற்கும், ஷீலா தீட்சித் குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தது. இதனால்தான் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. இருந்தபோதும் ஷீலா தீட்சித்தை நீக்க சோனியா விரும்பவில்லை. டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது சோனியா காந்தியும், ஷீலா தீட்சித்தும் ஒன்றாக சென்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக