செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஜெகன்மோகன்ரெட்டி : ஜெயலலிதாவை சந்திக்கிறார் ! சந்திரபாபு நாயுடு ? இருவரும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய பாடுபடுவார்களோ ?

 மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும்,
ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆந்திராவை பிரிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதியை ஜெகன்மோகன்ரெட்டி பெற்றுள்ளார். நாளை, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். கோட்டைக்கு சென்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக