வியாழன், 12 டிசம்பர், 2013

ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு: அசையும் சொத்துக்களை ஒப்படைக்க உத்தரவு!


பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அசையும் சொத்துக்களை வரும் 21ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அசையும் சொத்துக்களை ஒப்படைக்க உத்தரவு! இந்நிலையில், ஜெயலலிதா வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தி.மு.க. எம்.பி. தாமரைக்கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜான்குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தங்கம், வைர நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை வரும் 21ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக