வியாழன், 5 டிசம்பர், 2013

தருண் தேஜ்பால் :Shoma வின் சம்மதத்துடனேயே நடந்தது ! பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை

பனாஜி: சக பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை என்றும் அவரது சம்மதத்துடனேயெ அனைத்தும் நடந்தது என்று டெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் போலீசிடம் தெரிவித்துள்ளார். கோவா ஹோட்டல் ஒன்றில் பெண் பத்திரிகையாளரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார் தருண் தேஜ்பால் என்பது புகார். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். போலீஸ் கஸ்டடியில் தருண் தேஜ்பாலிடம் 2 முறை ஆண்மை பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை என்றும் இருவரது சம்மதத்துடனேயே எல்லாம் நடந்தது எனவும் போலீசிடம் தருண் தேஜ்பால் கூறியுள்ளார். அத்துடன் விசாரணைக்கு தேஜ்பால் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கோவா போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தாம் அத்துமீறி நடக்கவில்லை என்பதையே தேஜ்பால் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக